NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தாண்டு இறுதிக்குள்ளேயே இந்தியா- பிரிட்டன் இடையிலான FTA கையெழுத்தாக வாய்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தாண்டு இறுதிக்குள்ளேயே இந்தியா- பிரிட்டன் இடையிலான FTA கையெழுத்தாக வாய்ப்பு
    இந்தாண்டு இறுதிக்குள்ளேயே இந்தியா- பிரிட்டன் இடையிலான FTA கையெழுத்தாக வாய்ப்பு

    இந்தாண்டு இறுதிக்குள்ளேயே இந்தியா- பிரிட்டன் இடையிலான FTA கையெழுத்தாக வாய்ப்பு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 29, 2023
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது (FTA) இந்த ஆண்டு இறுதிக்கு முன்பே கையெழுத்தாக வாய்ப்புகள் இருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

    பிரிட்டனுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது இந்தியா. இந்தப் பேச்சுவார்த்தையின் பெரும்பாலான பகுதிகளில் இரு நாடுகளுக்குமிடையே ஒருமித்த கருத்தே நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார் மத்திய வர்த்தக அமைச்சக செயலாளர் சுனில் பர்த்வால்.

    மேலும், இரு நாடுகளுக்குமிடையே சர்ச்சைக்குரிய வகையில் கருதப்படும் விஷயங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையானது சுமுகமான முடிவை எட்டியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர்.

    வணிகம்

    இந்த FTA-வினால் இரு நாடுகளுக்கும் என்ன லாபம்?

    கடந்தாண்டு ஆஸ்திரேலியாவுடன் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் கடந்து, இந்தியாவிற்கு பிரிட்டனுடனான இந்த ஒப்பந்தமே, வளர்ந்த நாடுகளுடன் மேற்கொள்ளப்படவிருக்கும் முதல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகும்.

    பிரிட்டனோ, கடந்த 2020-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு, உலக நாடுகளுடனான வர்த்தக தொடர்புகளை பரவலாக்குவதில் இந்தியாவுடனான இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பிரிட்டனுடனான இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், ஏற்றுமதிகளை அதிகரிக்க நம்பிக்கை கொண்டிருக்கிறது இந்தியா.

    பிரிட்டனுக்கு, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் மதுபானங்கள், ப்ரீமியம் கார்கள் மற்றும் சட்டப்பூர்வமான சேவைகளை வழங்குவதற்கு இந்தியாவில் இன்னும் எளிதான சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரிட்டன்
    வணிகம்
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா

    பிரதமர் மோடி- இலங்கை அதிபர்  சந்திப்பின் எதிரொலி: 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்த இலங்கை  ரணில் விக்கிரமசிங்க
    கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மீண்டும் விமான சேவையை தொடங்க டிஜிசிஏ ஒப்புதல் விமான சேவைகள்
    நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை - பிரதமர் மோடி அறிவிப்பு  ரணில் விக்கிரமசிங்க
    இலங்கையிலும் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது UPI யுபிஐ

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா

    வணிகம்

    புதிய ஸ்பெக்ட்ரம் பேண்டுகளுக்கான ஏலத்தை நடத்த ட்ராயை அணுகும் தொலைத்தொடர்புத் துறை டிராய்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 10 தங்கம் வெள்ளி விலை
    பத்திரப்பதிவு சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது - தமிழக அரசு  தமிழ்நாடு
    வாய்ஸ் கால்கள் மற்றும் SMS மூலம் பெறும் வருவாயை இழந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிராய்

    உலகம்

    குறையும் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடி, காரணம் என்ன? ரஷ்யா
    இந்த கைல பணம், அந்த கைல ஆபாச படம்: சர்ச்சையில் சிக்கியுள்ள பிபிசி நிறுவனம் இங்கிலாந்து
    காதலிக்காக 900 கோடி சொத்தை விட்டு செல்வதாக உயில் எழுதிய இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் இத்தாலி
    உலகளவில், அதிக சைவ பிரியர்கள் இருக்கும் நாடாக இந்தியா முன்னிலை; கடைசி இடத்தில் ரஷ்யா உணவு பிரியர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025