பட்ஜெட் 2024: 3 புற்றுநோய் மருந்துகள் இனி மலிவு விலையில் கிடைக்கும்
மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து "முழுமையாக" விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். டிரஸ்டுஜுமாப் டெருக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப் மற்றும் துர்வாலுமாப் ஆகியவையே அந்த உயிரக்காக்கும் மருந்துகள். "உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிக்க" மருத்துவ எக்ஸ்ரே இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே குழாய்கள் மற்றும் பிளாட் பேனல் டிடெக்டர்கள் மீதான அடிப்படை சுங்க வரியில் (BCD) மாற்றங்களையும் நிதியமைச்சர் முன்மொழிந்தார்.
எந்த வகையான புற்றுநோய்க்கு, மருந்துகள் சிகிச்சை அளிக்கின்றன
Trastuzumab Deruxtecan என்ற மருந்து மார்பக புற்றுநோய், இரைப்பை அல்லது இரைப்பை உணவுக்குழாய் அடினோகார்சினோமா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் Osimertinib சில அசாதாரண எபிடெர்மல் வளர்ச்சி காரணி (EGFR) மரபணுக்கள் உள்ளவர்களுக்கு சிறிய அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோய் (NSCLC) சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட வகையான பித்தநீர் அமைப்பு புற்றுநோய் (பித்த நாளம் மற்றும் பித்தப்பை புற்றுநோய்), எண்டோமெட்ரியல் புற்றுநோய், ஹெபடோசெல்லுலர் கார்சினோமா (ஒரு வகை கல்லீரல் புற்றுநோய்), சிறிய அல்லாத செல் நுரையீரல் புற்றுநோய் மற்றும் சிறிய செல் நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க Durvalumab பயன்படுத்தப்படுகிறது.