தேர்தல் பத்திரங்களை வாங்கிய முக்கிய கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள்
ஏப்ரல் 2019 மற்றும் ஜனவரி 2024 க்கு இடையில் மொத்தம் 333 நபர்கள் ₹358.91 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியதாக இந்திய தேர்தல் ஆணையத்தின்(ECI) தேர்தல் பத்திரங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன. அப்படி தேர்தல் பத்திரங்கள் வாங்கிய 15 நபர்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பதவிகளை வகிக்கின்றனர், அந்த 15 பேரும் ரூ.158.65 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 15 நபர்களின் விவரங்கள்
லட்சுமி நிவாஸ் மிட்டல்(ஆர்செலர் மிட்டல்): ரூ.35 கோடி லக்ஷ்மிதாஸ் வல்லபதாஸ்(ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ்): ரூ.25 கோடி ராகுல் பாட்டியா(இண்டிகோ): ரூ.20 கோடி இந்தர் தாகுர்தாஸ் ஜெய்சிங்கனி(பாலிகேப்): ரூ.14 கோடி ராஜேஷ் மன்னாலால் அகர்வால்(அஜந்தா பார்மா): ரூ.13 கோடி ஹர்மேஷ் ராகுல் ஜோஷி(ஓம் சரக்கு குழுமம்): தலாரூ.10 கோடி கிரண் மஜும்தார் ஷா(பயோகான்): ரூ.6 கோடி இந்திராணி பட்நாயக்: ரூ.5 கோடி சுதாகர் கன்சர்லா(யோடா குழுமம்): ரூ.5 கோடி அபிராஜித் மித்ரா(Searock Infraproject): ரூ.4.25 கோடி சரோஜித் குமார்டே(ஜேடி அக்ரோ டெவலப்மென்ட் ): ரூ.3.4 கோடி திலீப் ராமன்லால் தாக்கர்(சமுத்ரா ரியல் எஸ்டேட்): ரூ.3 கோடி பிரகாஷ் பல்வந்த் மெங்கனே(ஸ்ரீநாத் ஸ்தபத்யா): ரூ.3 கோடி நிர்மல் குமார் பத்வால்(பெங்குயின் டிரேடிங்): ரூ.2 கோடி
தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை
இந்த தரவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. அப்போது, 'லாட்டரி மன்னன்' சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கியது தெரியவந்தது. அரசியல் கட்சிகளுக்கு அதிகமாக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலில் 'லாட்டரி மன்னன்' சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அந்த நிறுவனம் மொத்தம் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அந்த நிறுவனம் வழங்கிய 37% நன்கொடை, அதாவது ரூ.509 கோடி, திமுகவுக்கு வழங்கப்பட்டதாகும்.