LOADING...
புதிய பாதையில் ட்ரீம்11இன் தாய் நிறுவனம்; நிதி சார்ந்த டிரீம் மணி ஆப் அறிமுகப்படுத்த திட்டம்
நிதி சார்ந்த டிரீம் மணி ஆப் அறிமுகப்படுத்த ட்ரீம்11 தாய் நிறுவனம் திட்டம்

புதிய பாதையில் ட்ரீம்11இன் தாய் நிறுவனம்; நிதி சார்ந்த டிரீம் மணி ஆப் அறிமுகப்படுத்த திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 24, 2025
08:46 pm

செய்தி முன்னோட்டம்

பிரபலமான ஆன்லைன் ஃபேண்டஸி கேமிங் தளமான ட்ரீம்11இன் தாய் நிறுவனமான டிரீம் ஸ்போர்ட்ஸ், விரைவில் டிரீம் மணி என்ற பெயரில் தனிப்பட்ட நிதி மேலாண்மை செயலியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை நிறைவேற்றியதையடுத்து, ட்ரீம்11 கட்டணப் போட்டிகளை நிறுத்திவிட்டு இலவசப் போட்டிகளுக்கு மாறியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், நிறுவனத்தின் வருவாயைப் பல்வகைப்படுத்த உதவும் ஒரு முக்கிய மூலோபாய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத் தடைக்குப் பிறகு தனது வணிகத்தை மாற்றுவதற்கான முயற்சியில், ட்ரீம் மணி செயலி பயனர்களுக்குப் பல நிதிச் சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

டிரீம் மணி வழங்கும் முக்கிய அம்சங்கள்

டிரீம் மணி மொபைல் ஆப்பில் பயனர்கள் தினசரி அல்லது மாதாந்திர அடிப்படையில் ₹10 போன்ற குறைந்த முதலீட்டில் கூடத் தங்கம் வாங்கவோ அல்லது முறையான முதலீட்டுத் திட்டத்தை (SIP) தொடங்கவோ முடியும். இந்த ஆப் மூலம் ₹1,000 முதல் நிலையான வைப்பு நிதிகளில் முதலீடு செய்யலாம். இதற்குப் பாரம்பரிய வங்கிக் கணக்கு தேவையில்லை. மேலும், நிதிகளை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். செபியில் பதிவுசெய்யப்பட்ட ஏஐ முதலீட்டு ஆலோசகரான சிக்ஃபின் உடன் இணைந்து, பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை இணைப்பதன் மூலம் தங்கள் செலவு, வருமானம் மற்றும் முதலீடுகளை (மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள் உட்பட) ஒரே தளத்தில் கண்காணிக்க முடியும்.