Page Loader
குடும்பஸ்தர்களுக்கு ஷாக்; வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

குடும்பஸ்தர்களுக்கு ஷாக்; வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 07, 2025
04:51 pm

செய்தி முன்னோட்டம்

மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் வகையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டருக்கான விலை திங்களன்று (ஏப்ரல் 7) ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஒரு ஊடக சந்திப்பின் போது இந்த அதிகரிப்பை உறுதிப்படுத்தினார். இதையடுத்து வீட்டு உபயோக சிலிண்டரின் புதிய விலை இப்போது ரூ.803 இல் இருந்து அதிகரித்து ரூ.853 ஆக இருக்கும் என்று கூறினார். உஜ்வாலா திட்ட பயனாளிகள் மற்றும் பயனாளிகள் அல்லாதவர்கள் இருவருக்கும் விலை திருத்தம் ஒரே மாதிரியாக பொருந்தும். விலை நிர்ணய முடிவு ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதாந்திர அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அமைச்சர் ஹர்திப் சிங் பூரி பூரி மேலும் கூறினார்.

ஆகஸ்ட் 2024

ஆகஸ்ட் 2024க்கு பிறகு முதல் விலை உயர்வு

இது ஆகஸ்ட் 2024 முதல் வீட்டு உபயோக சிலிண்டரில் மேற்கொள்ளப்படும் முதல் விலை உயர்வாகும். இதற்கு நேர்மாறாக, வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலை இந்த மாத தொடக்கத்தில் குறைக்கப்பட்டது. ஏப்ரல் 1 ஆம் தேதி, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ.41 குறைத்தன. இதற்கிடையே, தற்போதைய வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்வு நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியா முழுவதும், குறிப்பாக உஜ்வாலா யோஜனாவின் கீழ் மானிய விலையில் எல்பிஜியை நம்பியுள்ள குறைந்த வருமானக் குழுக்களிடையே வீட்டு வரவு செலவுத் திட்டங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஹர்திப் சிங் பூரி அறிவிப்பு