தீபாவளி முகூர்த்த வர்த்தகம் 2026: ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தைகள் இயங்கும்
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்தியப் பங்குச்சந்தைகளான என்.எஸ்.இ (NSE) மற்றும் பி.எஸ்.இ (BSE) ஆகிய இரண்டும் இன்று சிறப்பு முகூர்த்த வர்த்தகத்திற்காக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் புதிய நிதியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நடைபெறும் இந்த பாரம்பரிய முகூர்த்த வர்த்தகத்தில், முதலீட்டாளர்கள் பிற்பகல் 2:20 மணி முதல் 3:30 மணி வரை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய முடியும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை என்றாலும், பல தசாப்தங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த ஆவணி மரபை பின்பற்றிச் சந்தைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் திறக்கப்படுகின்றன.
வர்த்தகம்
எந்தெந்தப் பிரிவுகளில் வர்த்தகம் நடைபெறும்?
பங்குகள், பொருட்கள் வழித்தோன்றல்கள், செலாவணி, ஈக்விட்டி ஃபியூச்சர்ஸ் & ஆப்சன்ஸ் மற்றும் பத்திரங்கள் கடன் மற்றும் கடன் வாங்குதல் உள்ளிட்ட பிரிவுகளிலும் வர்த்தகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகூர்த்த வர்த்தகத்திற்கான உள்நுழைவு நேரம் பிற்பகல் 1:15 மணி முதல் 1:50 மணி வரை அனுமதிக்கப்படும். அதனைத் தொடர்ந்த பிரத்யேக நேர அட்டவணை பின்வருமாறு:
பிளாக் டீல் விண்டோ:பிற்பகல் 1:50 -பிற்பகல் 2:05
முன் தொடக்கப் பகுதி:பிற்பகல் 2:05 -பிற்பகல் 2:20
பிரதான முகூர்த்த வர்த்தகம்:பிற்பகல் 2:20 -பிற்பகல் 3:30
முறைசார் அழைப்பு ஏலம்:பிற்பகல் 2:25 -பிற்பகல் 3:20
முடிவுச் சந்தை அமர்வு:பிற்பகல் 3:30 -பிற்பகல் 3:50
முடிவுச் சந்தை அமர்வு:பிற்பகல் 3:35 -பிற்பகல் 3:50
வர்த்தகப் பிந்தைய அமர்வு:பிற்பகல் 3:50 -மாலை 4:00
விடுமுறை விவரம்
சந்தை நிபுணர்கள் எச்சரிக்கை & விடுமுறை விவரம்
தீபாவளி முகூர்த்த வர்த்தகத்தில் முதலீடு செய்வது சுபகாரியமாக ருதப்பட்டாலும், வெறும் பண்டிகை மற்றும் கலாச்சார நம்பிக்கைகளுக்காக மட்டும் அவசரப்பட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் எனப் பங்குச்சந்தை நிபுணர்கள் முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
மேலும், தீபாவளி பாலிபிரதிபதா பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 10-ஆம் தேதி பங்குச்சந்தைகளுக்கு முழு நாள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.