Page Loader
வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு

வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jun 01, 2025
12:05 pm

செய்தி முன்னோட்டம்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வரும் வகையில் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.24 மற்றும் விமான டர்பைன் எரிபொருளை (ஏடிஎஃப்) கிலோலிட்டருக்கு ரூ.2,414.25 குறைத்துள்ளன. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதை பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து மூன்றாவது மாதாந்திர குறைப்பைக் குறிக்கிறது என்று எகனாமிக் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலைக் குறைப்பு சென்னை உட்பட முக்கிய நகரங்களில் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஏப்ரல் மாதத்திலிருந்து எந்த திருத்தமும் இல்லாமல் வீட்டு உபயோக எல்பிஜி விலைகள் மாறாமல் உள்ளன.

விமான டர்பைன் எரிபொருள்

விமான டர்பைன் எரிபொருள் விலைக் குறைப்பு

ஏடிஎஃப் விலைக் குறைப்பால் விமானத் துறையும் கணிசமாக பயனடைகிறது. டெல்லியில், ஜெட் எரிபொருள் இப்போது கிலோலிட்டருக்கு ரூ.83,072.55 ஆகும், இது 2.82% சரிவைக் குறிக்கிறது. மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் தற்போது விமான எரிபொருள் விலைகள் முறையே ரூ.77,602.73, ரூ.86,103.25 மற்றும் ரூ.86,052.57 ஆக உள்ளன. ஒரு விமான நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவுகளில் எரிபொருள் கிட்டத்தட்ட 40% ஆக இருப்பதால், இந்தக் குறைப்பு விமான நிறுவனங்களுக்கு குறுகிய கால நிவாரணத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரை மார்ச் 2024க்கு பிறகு நிலையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.