
கோடிகளிலிருந்து பூஜ்ஜியம் வரை: வீழ்ச்சியடைந்த பைஜு ரவீந்திரனின் நிகர மதிப்பு
செய்தி முன்னோட்டம்
edtech நிறுவனமான பைஜுஸ்-இன் இணை நிறுவனரான பைஜு ரவீந்திரன், Forbes இன் உலக பில்லியனர்கள் பட்டியல் 2024ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்பு, அவரது நிகர மதிப்பு ₹17,545 கோடி ($2.1 பில்லியன்) ஆக இருந்தது, ஆனால் தற்போது அது பூஜ்ஜியமாக சரிந்ததுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட்அப்களில் ஒன்றாகக் கொண்டாடப்பட்ட BYJU'S இப்போது பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
BYJU'S நிறுவனம் கணக்கியல் முரண்பாடுகள், தவறாகப் பிரதிநிதித்துவம் செய்தல் மற்றும் பரவலான பணிநீக்கங்கள் உட்பட தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்கிறது.
கடந்த ஆண்டில், வென்ச்சர் கேபிடல் நிதியில் குறைவு மற்றும் அதன் ஆன்லைன் கற்றல் சேவைகளுக்கான தேவை குறைவதால், அந்நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியிருந்தது.
மதிப்பீடு வீழ்ச்சி
நிதிக் சிக்கல்களுக்கு மத்தியில் BYJUவின் மதிப்பீடு வீழ்ச்சியடைந்தது
ரவீந்திரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து பல முதலீட்டாளர் குழு உறுப்பினர்களும் வெளியேறியுள்ளனர்.
கடந்த ஆண்டு பில்லியனர்கள் பட்டியலில் இருந்து ரவீந்திரன் உட்பட நான்கு பேர் மட்டுமே நீக்கப்பட்டதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
அவரது நிறுவனமான BYJU'S, அதன் மதிப்பீடு BlackRock ஆல், 1 பில்லியன் டாலராகக் கடுமையாகக் குறைக்கப்பட்டது. இது 2022இல் அதன் உச்சபட்ச $22 பில்லியன் மதிப்பீட்டிற்கு முற்றிலும் மாறுபட்டது ஆகும்.
பிப்ரவரி 2024 இல், BYJUஇன் பங்குதாரர்கள் ரவீந்திரனை அவரது CEO பதவியில் இருந்து நீக்க வாக்களித்தனர். நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் தீர்ப்பை பொறுத்து அவரை பதவி நீக்கம் செய்ய முடிவு செய்யும்.
முன்னதாக கடந்த மூன்று மாதங்களில் சம்பளபாக்கி காரணமாக வெளியேற்றங்களையும் சந்தித்து வருகிறது பைஜுஸ்.