Page Loader
பட்ஜெட் 2024: புதிய வருமான வரி விதிப்பு முறையில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கலாம்

பட்ஜெட் 2024: புதிய வருமான வரி விதிப்பு முறையில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கலாம்

எழுதியவர் Sindhuja SM
Jul 21, 2024
05:07 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யத் தயாராகி வருகிறார். வருமான வரிகள் நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்றாவாறு மாற்றப்படும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். வரி செலுத்துவோருக்கு ஆதரவாக வருமான வரியை கட்டமைத்துவிட்டு, நுகர்வுகளை அதிகரிக்க அரசாங்கம் முயலும் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே வரி விலக்கு எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. புதிய வரி விதிப்பு முறையின் கீழ் அரசாங்கம் வரி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதிய வரி விதிப்பில் விலக்கு வரம்பை ரூ. 5 லட்சமாக அரசாங்கம் உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா

விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுமா?

விலக்கு வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்தும் அவசியத்தையும் நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதாவது ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் வாங்கும் தனிநபர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2014 வரை ரூ.2 லட்சமாக இருந்த விலக்கு வரம்பை, நரேந்திர மோடி அரசாங்கம் தனது முதல் பட்ஜெடில் ரூ.2.5 லட்சமாக உயர்த்தியது. அதற்கு, 10 ஆண்டுகளாக விலக்கு வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்குப் பிறகு, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் உலகப் பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றின் காரணமாக வீட்டுப் பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது. எனவே, இந்த ஆண்டு விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்ற அதிக எதிர்பார்ப்பு உள்ளது.