
இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என RBI அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ரம்ஜான் பண்டிகை நாளான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
2024-25 நிதியாண்டின் கணக்குகளை முடிக்க வேண்டிய தேவை உள்ளதால், இந்த நாளில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ரம்ஜான் முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், 2024-25 நிதியாண்டின் இறுதி நாளாக இருப்பதால் இன்று வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்கள் திறந்திருக்குமென RBI தெரிவித்துள்ளது.
முன்னதாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கிகள் மூடப்படும் என ஆர்.பி.ஐ அறிவித்திருந்தாலும், கணக்குகளை முடிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் வங்கிகள் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி குறிப்பு
RBI வெளியிட்ட செய்தி குறிப்பு
"நிதியாண்டு முடிவுக்கு வருவதால், வங்கி பரிவர்த்தனைகள் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக இன்று வங்கிகள் திறந்திருக்க வேண்டும். குறிப்பாக அரசு ரசீதுகள் மற்றும் நிதிகளை கையாளும் வங்கிகள் வழக்கமான நேரங்களில் செயல்பட வேண்டும்" என RBI தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த ஏப்ரல் மாதம் மட்டுமே 16 நாட்கள் வங்கிகள் விடுமுறையில் இருக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட இந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும்.
வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளைப் பயன்படுத்துவதில் எந்தத் தொந்தரவும் ஏற்படாதவாறு முன்கூட்டியே இவை பற்றி தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எனினும் நாளை ஏப்ரல் 1 (செவ்வாய்) நிதியாண்டு முடிவுக்கு வருவதால் வங்கிகள் மூடப்படும். வங்கி மூடப்பட்டிருந்தாலும், ஆன்லைன் வங்கி சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும்.