LOADING...
அமேசானில் மீண்டும் பணிநீக்கம்! விற்பனையாளர் சேவைப் பிரிவில் ஊழியர்கள் வெளியேற்றம்
அமேசான் மீண்டும் ஒருமுறை பணிநீக்கத்தை அறிவித்துள்ளது

அமேசானில் மீண்டும் பணிநீக்கம்! விற்பனையாளர் சேவைப் பிரிவில் ஊழியர்கள் வெளியேற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
May 14, 2026
04:34 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மீண்டும் ஒருமுறை பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. இம்முறை நிறுவனத்தின் செல்லிங் பார்ட்னர் சர்வீசஸ் பிரிவில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் ஏற்கனவே சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள அமேசான், தற்போது இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமேசான் தளத்தில் பொருட்களை விற்பனை செய்யும் லட்சக்கணக்கான மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களுக்கு உதவும் பிரிவே 'செல்லிங் பார்ட்னர் சர்வீசஸ்' ஆகும். இந்தப் பிரிவு விற்பனையாளர்களை இணைப்பது, தளவாடங்கள் (Logistics) மற்றும் கணக்கு ஆதரவு போன்ற பணிகளை மேற்கொள்கிறது.

விளக்கம்

அமேசான் விளக்கம்

இது குறித்து அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"எங்கள் இலக்குகளை அடைய நிறுவனத்தை மேம்படுத்த அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்கிறோம். அதன் அடிப்படையில், செல்லிங் பார்ட்னர் சர்வீசஸ் குழுவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை நீக்க வேண்டிய கடினமான முடிவை எடுத்துள்ளோம்." பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இடைக்கால சுகாதார காப்பீடு, பணிநீக்க ஊதியம் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்கான உதவிகள் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னணி

தொடரும் பணிநீக்கங்கள் - பின்னணி

அமேசான் சிஇஓ ஆண்டி ஜாஸி பொறுப்பேற்ற பிறகு, நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே கடந்த அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் 30,000 ஊழியர்கள் நீக்கப்பட்டனர். தொடர்ந்து மார்ச் மாதம், ரோபோட்டிக்ஸ் பிரிவிலும் சிறிய அளவில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. தற்போது, விற்பனையாளர் சேவைப் பிரிவில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோய் காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மறுசீரமைக்கவே இந்தத் தொடர் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் கருதப்படுகிறது.

Advertisement