
சர்வதேச பயணிகளுக்காகவே புதிய சர்வதேச ரோமிங் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல்
செய்தி முன்னோட்டம்
வெளிநாடு செல்லும் பயணிகளுக்காக ஏர்டெல் புதிய சர்வதேச ரோமிங் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டங்கள் சர்வதேச பயணிகளுக்கு ஏற்ப, பல வசதிகளுடனும், மலிவு விலையிலும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஏர்டெல்லின் சர்வதேச ரோமிங் திட்டங்கள் தாராளமான டேட்டா அலவன்ஸுடன் வருகின்றன.
சில திட்டங்களில் in-flight டேட்டா அணுகளும் அடங்கும். பயணிகள் விமானத்தில் பறக்கும்போது கூட அவர்கள் தொடர்பில் இருக்க அனுமதிக்கிறது.
பயணிகளின் பயணத்தின் போது அவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு உதவ ஏர்டெல் முழுநேர வாடிக்கையாளர் ஆதரவை வழங்குகிறது.
ஏர்டெல்லின் இந்த புதிய சர்வதேச திட்டம் ரூ 195இல் தொடங்குகிறது.
இந்தத் திட்டங்கள் 184 வெவ்வேறு நாடுகளில் பொருந்தும், இதனால் பயனர்கள் ஒரே ஒரு சர்வதேச ரோமிங் பேக்குடன் பல நாடுகளுக்கு பயணிக்கலாம்.
ட்விட்டர் அஞ்சல்
ஏர்டெல்லின் புதிய ரோமிங் திட்டம்
#Smartயுகம் | வாடிக்கையாளர்கள் வசதிக்காக புதிய ரோமிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது AIRTEL நிறுவனம்#SunNews | #Airtel | #Roamingpacks pic.twitter.com/hHgzrYtjte
— Sun News (@sunnewstamil) April 23, 2024