Page Loader
இந்தியா மற்றும் இலங்கையில் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அக்சென்சர்
இந்தியா மற்றும் இலங்கையில் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அக்சென்சர்

இந்தியா மற்றும் இலங்கையில் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அக்சென்சர்

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 13, 2023
11:12 am

செய்தி முன்னோட்டம்

உலகளவில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான, அயர்லாந்தைச் சேர்ந்த அக்சென்சர் நிறுவனம் இந்தியா மற்றும் இலங்கையில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்தியாவில் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையானது பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில், தாங்கள் நிர்ணயித்த அளவு வளர்ச்சியை எட்ட முடியவில்லை. இந்தியாவில் ஏற்பட்டுள்ள தடைகளைக் கடந்து, உளகளாவிய பொருளாதாரமும் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக் குறைவுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. இந்த பொருளாதார மந்தநிலையைக் குறிப்பிட்ட, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், எச்சிஎல் மற்றும் விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை ஒரு காலாண்டிற்குத் தள்ளி வைப்பதாக அறிவித்திருந்தன.

வணிகம்

என்ன செய்யவிருக்கிறது அக்சென்சர்?

இந்திய தகவல் தொழில்நுடப் நிறுவனஙகளைத் தொடர்ந்து, அக்சென்சர் நிறுவனமும் 2023ம் ஆண்டில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறது. மேலும், இந்தியா மற்றும் இலங்கையில் தங்கள் நிறுவன ஊழியர்களில் 19,000 பேரை இந்த ஆண்டு பணிநீக்கம் செய்யவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். அக்சென்சர் நிறுவனத்தின் இந்த முடிவானது இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே, பிற நாடுகளில் பணிநீக்கம் செய்யவிருப்பதாக எந்தவொரு அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அக்சென்சரின் இந்த முடிவு அந்நிறுவனத்தின் இந்திய ஊழியர்களை மட்டுமின்றி நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்திலும் குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.