Loading...
8வது ஊதியக் குழு அப்டேட்: DA 63% உயர்வுக்குப் பிறகு மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்து என்ன?
8வது ஊதியக் குழு அப்டேட்

8வது ஊதியக் குழு அப்டேட்: DA 63% உயர்வுக்குப் பிறகு மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்து என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 26, 2026
06:53 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் அண்மையில் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படியை (DA) உயர்த்தி அறிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பார்வை தற்போது 8வது ஊதியக் குழுவின் மீது திரும்பியுள்ளது. பணவீக்கத்திற்கு ஏற்ப அவ்வப்போது செய்யப்படும் அகவிலைப்படி உயர்வுக்கும் அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் 8வது ஊதியக் குழுவிற்கும் நேரடித் தொடர்பு இல்லை. புதிய ஃபிட்மென்ட் ஃபேக்டர் மற்றும் திருத்தப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் குறித்த தெளிவான அறிவிப்புக்காக கோடிக்கணக்கான ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

மாநிலங்களின் அறிவிப்புகள்

63%-ஆக உயர்த்தப்பட்ட DA மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் அறிவிப்புகள்

கடந்த அக்டோபர் 28 அன்று கூடிய மத்திய அமைச்சரவை ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR விகிதத்தை 3% உயர்த்தி 63%-ஆக அறிவித்தது.

இதன் மூலம் சுமார் 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 68.71 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவதோடு அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ₹10,016.10 கோடி கூடுதல் செலவு ஏற்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநில அரசுகளும் அகவிலைப்படியை 3% உயர்த்தி 63%-ஆக அறிவித்துள்ளன.

மேலும் பஞ்சாப் அரசு நவம்பர் 1 முதல் 53%-ஆக உயர்த்தியுள்ளதோடு மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களும் தீபாவளியை முன்னிட்டு DA உயர்வை அறிவித்தன.

8வது ஊதியக் குழு

மே 2027-க்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் 8வது ஊதியக் குழுவும் NC-JCM கோரிக்கைகளும்

நவம்பர் 3, 2025 அன்று அமைக்கப்பட்ட 8வது மத்திய ஊதியக் குழுவிற்குத் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க 18 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் வரும் மே 2027-க்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார நிலை நிதி விவேகம் மற்றும் மாநில அரசுகளின் நிதி நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆணையம் தனது பரிந்துரைகளை இறுதி செய்யும்.

இதற்கிடையே மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான NC-JCM குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ₹69,000-ஆக நிர்ணயிக்கவும் 3.833 ஃபிட்மென்ட் ஃபேக்டரை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் இவை ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் மட்டுமே என்பதால் ஆணையத்தின் இறுதிப் பரிந்துரையே முடிவானதாக இருக்கும்.

ADVERTISEMENT

மாநில அரசு ஊழியர்கள்

மாநில அரசு ஊழியர்களுக்கும் 8வது ஊதியக் குழு ஊதிய உயர்வு கிடைக்குமா?

8வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு ஊழியர்களுக்கு அதன் பரிந்துரைகள் தானாகவே பொருந்தாது.

இருப்பினும் வரலாற்று ரீதியாக மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளைப் பெரும்பாலான மாநில அரசுகள் ஏற்றுச் செயல்படுத்தி வருகின்றன.

கடந்த அக்டோபர் 2025-ல் 8வது ஊதியக் குழுவின் விதிமுறைகளை வெளியிட்ட போதே மாநில அரசுகளின் நிதி நிலையில் இதன் தாக்கம் இருக்கும் என்பதை மத்திய அமைச்சரவையும் சுட்டிக்காட்டியிருந்தது.

எனவே மத்திய அரசு பரிந்துரைகளை ஏற்ற பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் நிதி நிலைக்கு ஏற்ப தனித்தனியாக முடிவெடுத்து புதிய ஊதிய விகிதத்தை அமல்படுத்தும்.

ADVERTISEMENT