8வது ஊதியக் குழு: பதவி உயர்வுக்கான காத்திருப்புக் காலத்தை அதிகபட்சம் 4 ஆண்டுகளாக குறைக்க FNPO கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
அஞ்சல் துறை ஊழியர்களின் பதவி உயர்வுக்கான தகுதி சேவைக் காலத்தை அதிகபட்சம் நான்கு ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும் என தேசிய அஞ்சல் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 20 தேதியிட்டு 8வது ஊதியக் குழுவின் தலைவர் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்க்கு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சிவாஜி வாசிரெட்டி இது குறித்துக் கடிதம் எழுதியுள்ளார். பதவி உயர்வுக்கான தகுதி சேவைக் காலத்தை நிர்ணயிக்கும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் 2022 செப்டம்பர் அலுவலகக் குறிப்பாணையை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை
12 ஆண்டுகள் வரையிலான காத்திருப்பால் அஞ்சல் துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள்
தற்போதைய விதிகளின்படி சில பதவி உயர்வுகளுக்கு ஊழியர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இத்தகைய நீண்ட காத்திருப்புக் காலத்தால் அஞ்சல் துறையில் மேற்பார்வைப் பதவிகள் மற்றும் குரூப் பி நிலைகளில் ஏராளமான காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
ஊழியர் பற்றாக்குறை காரணமாக பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரிப்பதோடு நிர்வாக முடிவுகள் தாமதமாகின்றன.
பரிந்துரை
1 முதல் 4 ஆண்டுகள் வரையிலான சீரான பதவி உயர்வுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு பரிந்துரை
அனைத்து மத்திய அரசுத் துறைகளிலும் பதவி உயர்வுக்கான தகுதி சேவைக் காலத்தை ஒன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் சீராக நிர்ணயிக்க வேண்டும் என FNPO பரிந்துரைத்துள்ளது.
புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் இடைக்காலத்தில் தற்போதைய ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
மேலும் காலிப்பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வு தேக்கநிலையை அவ்வப்போது ஆய்வு செய்யும் நடைமுறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறுதி முடிவு
8வது ஊதியக் குழுவின் பரிந்துரை மற்றும் மத்திய அரசின் ஒப்புதலே இறுதி முடிவாகும்
இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் அஞ்சல் மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் பணி முன்னேற்றம் வெளிப்படையானதாகவும் விரைவானதாகவும் மாறும்.
இருப்பினும் இவை ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகள் மட்டுமே தவிர இன்னும் அதிகாரப்பூர்வ விதி மாற்றமாக அங்கீகரிக்கப்படவில்லை.
8வது ஊதியக் குழுவின் இறுதி பரிந்துரைகள் மற்றும் மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகே பதவி உயர்வு விதிகளில் மாற்றம் செய்யப்படும்.