Page Loader
AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட  எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - யுலு, பஜாஜ் கூட்டணி
யுலு மற்றும் பஜாஜ் கூட்டணியில் உருவாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - யுலு, பஜாஜ் கூட்டணி

எழுதியவர் Siranjeevi
Feb 28, 2023
05:42 pm

செய்தி முன்னோட்டம்

பஜாஜ் மற்றும் யுலு நிறுவனங்கள் இணைந்து, மிராகில் GR மற்றும் DeX GR மாடல்களை இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு மாடல்களுமே யுலு நிறுவனத்தின் AI-யை சார்ந்த தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிராகில் GR தனிநபர் பயன்படுத்தும் வாகனம். இதை குறைந்த தூர போக்குவரத்துக்கு ஏற்ற வாகனமாக உருவாக்கப்பட்டு உள்ளது. மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் உடையது. அதேப்போன்று, DeX GR மாடல் வினியோக பயன்பாட்டுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சம் 15 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

யுலு பஜாஜ் கூட்டணியில் உருவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - எப்போது வெளியீடு?

இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஹெட்லைட், டெயில்லைட், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ரியர் ஸ்ப்ரிங்குகள், இரு வீல்களிலும் டிரம் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் யுலு நிறுவனம் வருவாயை 10 மடங்கு வரை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் தனது ஸ்கூட்டர்களின் வகைகளை இரட்டிப்பாக்கியுள்ள்ள யூலூ, இந்தியாவின் முக்கிய நகரங்களில் 100,000 வாகனங்களை விற்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது யுலுவில், யுமா எனர்ஜி மூலம் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது., இவை பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் சுமார் 100 யுமா ஸ்டேஷன்கள் உள்ளன.