Page Loader
120கிமீ செல்லும் River Indie மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!
River Indie மின்சார ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது

120கிமீ செல்லும் River Indie மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

எழுதியவர் Siranjeevi
Feb 23, 2023
06:46 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய மின் வாகன சந்தையில், River Indie எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த எஸ்யூவி அடைமொழியை பயன்படுத்தியே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிப்பு நிறுவனமான ரிவரும் அறிமுகம் செய்தது. இந்தியாவில் பள்ளம், மேடுகள் நிறைந்த சாலையை சமாளிக்கும் விதமாக இன்டீயின் முன் பக்க வீலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டு உள்ளது. பெரிய எல்சிடி திரை முழு டிஜிட்டல் வசதி உடன், ரோபோக்களின் கண்களைப் போன்ற வித்தியாசமான தோன்ற கொண்ட எல்இடி லைட்டுகள், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் கொண்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

River Indie எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்

மேலும், இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். 18 கிரேடபிலிட்டியை பெற இந்த மோட்டார் அனுமதிக்கும். ஓலா எஸ் 1 ப்ரோ 15 டிகிரி கிரேடபிலிட்டி வரை மட்டுமே அனுமதிக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 1.25 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் மற்றும் அதன் ஸ்டைல் ஆகியவை இந்த பணத்திற்கு உகந்த தயாரிப்பு இன்டீ என்பதை காண்பிக்கின்றது இதனை வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக சார்ஜிங் கருவியையும் சேர்த்தே இன்டீ உடன் விற்பனைக்கு வழங்குகின்றது.