ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் குஞ்சனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர், நந்தனம் சாலை பகுதியில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த போது திடீரென எதிர்பாராமல் அதில் இருந்து புகை கிளம்பியுள்ளது. இதனால், பதறிப்போன அந்த நபர் விலகி செல்ல, ஒரு சில வினாடிகளில் அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. பின்னர், சிறிது நேரத்தில் வாகனம் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. இந்த சம்பவத்தில் பாலசுப்பிரமணி அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர்தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.