
தங்களுடைய ப்ரீமியம் R3 பைக்கை இந்தியாவில் வெளியிடுமா யமஹா?
செய்தி முன்னோட்டம்
தற்போது இந்தியாவில் 150சிசி செக்மண்டில் மட்டுமே பைக்குகளை விற்பனை செய்து வருகிறது ஜப்பானை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான யமஹா.
பிறநாடுகளில் தங்களின் ப்ரீமியம் பைக்குகளை யமஹா விற்பனை செய்து வந்தாலும், இந்தியாவில் அவற்றை விற்பனை செய்யவில்லை.
கடைசியாக 2019-ல் தங்களுயை R3 ப்ரீமியம் பைக்கின் விற்பனையை நிறுத்தியது யமஹா.
இந்நிலையில், அந்நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தங்களது ப்ரீமியம் பைக் விற்பனையை தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
அடுத்து வரும் மாதங்களில் R3 பைக்கை இந்தியாவில் மீண்டும் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் CBU (Completely Built Unit) முறையிலேயே தங்களது ப்ரீமியம் பைக்குகளை வெளியிட யமஹா நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யமஹா
யமஹா R3:
2023-ம் ஆண்டுக்கான R3 பைக்கை தற்போது தான் பிற நாடுகளில் வெளியிட்டிருக்கிறது யமஹா.
அதன் பெரிய பைக்குகளில் பயன்படுத்தப்படும் இன்டிகேட்டர்களை R3-யில் அளித்திருக்கும் யமஹா, புதிய பர்பிள் நிறத்தையும் R3-யில் கொடுத்திருக்கிறது.
இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. 42hp பவர் மற்றும் 29.5Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 321சிசி பேரலல் ட்வின் இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஸ்லிப்பர் கிளட்ச், டூயல் சேனல் ஏபிஎஸ், LED விளக்குகள் மற்றும் LCD டிஸ்பிளே ஆகிவற்றை R3-யில் கொடுத்திருக்கிறது யமஹா.
இந்தியாவில் R3 வெளியானால், கேடிஎம் RC 390, பிஎம்டபிள்யூ G 310 RR மற்றும் கவாசாகி நின்ஜா 400 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.