LOADING...
காரில் ஸ்பேர் டயர் மட்டும் சிறியதாக இருப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம்
காரின் ஒட்டுமொத்த எடையை குறைக்கவே சிறிய டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன

காரில் ஸ்பேர் டயர் மட்டும் சிறியதாக இருப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2026
05:06 pm

செய்தி முன்னோட்டம்

பொதுவாக கார்களில் உள்ள நான்கு சக்கரங்களை விட, அவசர காலத்திற்காக வைக்கப்படும் ஸ்பேர் டயர் ஒரு அங்குலம் வரை சிறியதாக இருப்பதை நாம் கவனித்திருப்போம். இது ஒரு குறைபாடு அல்ல, மாறாக பல தொழில்நுட்ப மற்றும் நடைமுறை காரணங்களுக்காக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு பொறியியல் முடிவாகும். காரின் ஒட்டுமொத்த எடையை குறைக்கவே சிறிய டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. காரின் எடை குறையும் போது, அதன் மைலேஜ் அதிகரிக்கிறது. ஒரு முழு அளவிலான டயருக்கு பதிலாக சிறிய 'டோனட்' டயரை பயன்படுத்துவது எரிபொருள் சிக்கனத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதனால் விரைவாக அருகில் இருக்கும் மெக்கானிக் கடையை விரைவாகவும் அடையலாம்.

இடவசதி

இடவசதி, செலவு மற்றும் தற்காலிகப் பயன்பாடு

நவீன கார்களில் டிக்கி பகுதியில் இடவசதியை அதிகப்படுத்துவதற்காக சிறிய டயர்கள் வடிவமைக்கப்படுகின்றன. இது காரின் உள்ளே அதிக பொருட்களை வைக்க வழிவகை செய்கிறது. மேலும், அவசர காலங்களில் டயரை மாற்ற நேரிடும் போது, அதன் எடை குறைவாக இருப்பதால் ஒரு தனிநபரால் எளிதாக தூக்கி மாட்ட முடிகிறது. உற்பத்திச் செலவைக் குறைப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். ஸ்பேர் டயர்கள் என்பவை அருகில் உள்ள மெக்கானிக் ஷாப் வரை செல்வதற்கான ஒரு தற்காலிகத் தீர்வே தவிர, அவற்றை வைத்து நீண்ட தூரம் பயணிக்க முடியாது. பொதுவாக இத்தகைய டயர்களைக் கொண்டு 80 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்றும், 100 கி.மீ தூரத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement