
Volkswagen Taigun, Virtus அனைத்து மாடல்களிலும் இனி 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும்
செய்தி முன்னோட்டம்
ஃபோக்ஸ்வேகன் அதன் டைகன் எஸ்யூவி மற்றும் விர்டஸ் செடான் மாடல்களை மேம்படுத்தப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இப்போது அனைத்து மாடல்களிலும் ஆறு ஏர்பேக்குகள் வழங்குவதை கொள்கையாக ஏற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, டாப் ரேஞ்ச், டாப்லைன் பதிப்புகள் மற்றும் அந்தந்த ஜிடி வகைகளில் மட்டுமே ஆறு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த பாதுகாப்பு புதுப்பிப்பு, இந்த அம்சத்தை கம்ஃபோர்ட்லைன் மற்றும் ஹைலைன் மாடல்கள், ஜிடி டிரிம்கள் மற்றும் ஜிடி எட்ஜ், ஸ்போர்ட் மற்றும் சவுண்ட் எடிஷன் போன்ற சிறப்பு பதிப்பு வகைகளுக்கு விரிவுபடுத்துகிறது.
எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், மல்டி-கோலிஷன் பிரேக்கிங் சிஸ்டம், டிபிஎம்எஸ், பிரேக் அசிஸ்ட் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவை இந்த இரண்டு மாடல்களிலும் சேர்க்கப்பட்டுள்ள மற்ற பாதுகாப்பு அம்சங்கள்.
விலை
விலையில் மாற்றம் இல்லை
கூடுதல் ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டாலும், இந்த மாடல்களின் விலையை ஃபோக்ஸ்வேகன் உயர்த்தவில்லை.
Taigun இன் பேஸ்-எண்ட் கம்ஃபர்ட்லைன் டிரிம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ₹10.99 லட்சம் சிறப்பு விலையில் வழங்கப்படுகிறது.
இது வழக்கத்தை விட ₹70,000 குறைவு.
Taigun இன் அதிகபட்ச விழா ₹20 லட்சம் வரை இருக்கும் எனவும், Virtus விலை ₹11.56 லட்சம் முதல் ₹19.41 லட்சம் வரை (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Taigun மற்றும் Virtus இரண்டும் Global NCAP இலிருந்து 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன . அவர்கள் இரட்டை ஏர்பேக்-குறிப்பிட்ட பதிப்புகள் மூலம் தான் இந்த மதிப்பீட்டை அடைந்தனர்.