Page Loader
பயன்படுத்திய சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வட இந்திய பிரபலங்கள்!
செகண்ட் ஹேண்ட் சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் பிரபலங்கள்

பயன்படுத்திய சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வட இந்திய பிரபலங்கள்!

எழுதியவர் Siranjeevi
Mar 20, 2023
07:15 pm

செய்தி முன்னோட்டம்

கார் தயாரிப்புகளில் புதிய கார்கள் அதிகம் வரும் நேரத்தில் பழைய கார்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த லிஸ்ட்டில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை ஷில்பா ஷெட்டி போன்ற பல பிரபலங்கள் இணைந்துள்ள தகவலை பற்றி இங்கு பார்ப்போம். விராட்கோலி இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி என்ற பயன்படுத்தப்பட்ட சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை மட்டுமே 3.5 கோடி ரூபாய் இருக்கும் எனக்கூறப்படுகிறது. இந்த கார் மட்டுமின்றி அவர், பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் காரையும் வாங்கி இருக்கிறார். அதேப்போல், பல சொகுசு ஆடி கார்களும் இவர் வசம் தான் உள்ளது.

கார் நிறுவனங்கள்

செகண்ட் ஹேண்ட் சொகுசு கார்களை வாங்கி குவியும் பிரபலங்கள்

ஷில்பா ஷெட்டி பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி இவரும் பயன்படுத்தப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் வோக் எனும் விலையுர்ந்த லக்சூரி காரை பயன்படுத்தி வருகிறார். இதன் மதிப்பு மட்டுமே, கிட்டத்தட்ட 3 கோடிக்கும் அதிகமாக வரும் எனக்கூறப்படுகிறது. இவர் Big Boys Toys எனும் நிறுவனத்திடம் இதை வாங்கியுள்ளார். சர்தார் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக் இந்திய ஹாக்கி விளையாட்டு வீரரான சர்தார் சிங் மற்றும் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இருவருமே Big Boys Toys நிறுவனத்திடம், தினேஷ் கார்த்தி போர்ஷே 911 டர்போ எஸ் காரையும், சர்தார் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவரையும் வாங்கியுள்ளனர். இவர்களை போன்று பல பிரபலங்கள் இந்நிறுவனத்திடம் இருந்து செகண்ட் ஹேண்ட் காரை வாங்கி இருக்கின்றனர்.