குறைந்த விலையில் வெளியாகும் ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் கார்!
செய்தி முன்னோட்டம்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மிக குறைந்த விலையில், முதல் மின்சார காரை கான்செப்ட் மாடலாக வெளியீடு செய்திருக்கின்றது.
இந்த காரின் சிறப்பு அம்சங்களை பற்றி பார்ப்போம். இந்த கார் ஐடி. 2ஆல் (ID. 2all) எனும் கான்செப்ட் எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.
சீக்கிரமாக இந்த எலக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகளை ஃபோக்ஸ்வேகன் தொடங்க உள்ளது. ஆனால், என்ன விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்கிற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
விற்பனைக்கு வருகையில், போலோ அல்லது கோல்ஃப் எனும் பெயரில் வெளியாகும் எனத்தெரிகிறது. முதலில் ஐரோப்பிய சந்தையிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம்
2025 ஆண்டிற்குள் குறைந்த விலையில் அறிமுகமாகும் ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் கார்
மேலும், 2025 ஆம் ஆண்டிற்குள் அங்கு விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் படங்கள் காரின் உட்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் என அனைத்தும் புதுமையான வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றது.
குறிப்பாக, கேபினில் பல புதுமையான வசதிகளை நிறுவனம் சேர்த்து இருக்கின்றது.
இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் எந்த காரிலும் பயன்படுத்தாத யுக்தியை பயன்படுத்தியே இந்த காரை ஃபோக்ஸ்வேகன் தயார் செய்திருக்கின்றது.
இந்த கார் வெளியாகும் பட்சத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.