Page Loader
10 ஆண்டு அலைக்கழிப்பு! ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தை அலற விட்ட நபர்
ஃபோக்ஸ்வேகன் கார் பிரச்சினை - 10 ஆண்டுக்கு பின் தீர்வு

10 ஆண்டு அலைக்கழிப்பு! ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தை அலற விட்ட நபர்

எழுதியவர் Siranjeevi
Mar 15, 2023
02:55 pm

செய்தி முன்னோட்டம்

ஃபோக்ஸ்வேகன் கார் பிரச்சினையால் நபர் ஒருவர் நீதிமன்றம் வரை சென்று, போராடி இழப்பீட்டு பணத்தை வாங்கியுள்ளார். சென்னை மவுண்ட் ரோட்டை சேர்ந்த தேவராயன் சுப்பு என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரை வாங்கி இருக்கின்றார். அப்போது ஒரு மாதம் நன்றாக ஓடிய கார் அதன் பின் பல பிரச்சினைகள் வந்துள்ளது. இதனால் அடிக்கடி ஃபோக்ஸ்வேகன் சர்வீஸ் மையத்தில் விட்டுள்ளார். ஆனாலும் அதன் பின் சிக்கல் தீரவில்லை என முறையாக அந்நிறுவனத்திடம் வாதாட அதற்கு அவர்கள் கடுமையாக நடந்துகொண்டும் அலைக்கழித்தும் உள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலாகி தேவராயன், சரி செய்யப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவது குறித்தும் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் ஓர் மனுவை சமர்பித்தார்.

கார் பிரச்சினை

ஃபோக்ஸ்வேகன் கார் பிரச்சினையை 10 ஆண்டுக்கு பின் இழப்பீடு வாங்கிய நபர்

இதற்கு பதில் மனு அளித்த அந்நிறுவனம் வென்டோ ஓர் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டதாகவும், மனுதாரருக்கு இதுகுறித்து புகார் அளிக்க எந்த உரிமையும் இல்லை என மிக மோசமாக வாதிட்டது. ஆனாலும், நிறுவனத்தின் மோசமான பதிலை ஏற்க மறுத்த நுகர்வோர் மன்றம், நீதியை பெற்று தரும் விதமான கருத்துகளை முன் வைத்தது. இதன்பின், பழுதான வாகனத்திற்கு அபாரதம் வழங்கவும் உத்தரவிட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக நடைபெற்று வந்த இந்த சட்ட போராட்டம் தற்போது தீர்ப்பை பெற்றிருக்கின்றது. எனவே, காருக்காக ரூ. 7.23 லட்சமும், இழப்பீடாக ரூ. 2.2 லட்சமும் வழங்கவும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்படி இந்நிறுவனத்தை கண்டிக்கப்படுவது இது முதல் முறையல்ல பல நிறுவனங்களும் இப்படி செயல்பட்டு இருக்கின்றது.