
சாலையில் பணம் பறிக்க இப்படி ஒரு நூதன கொள்ளையா? உஷார்!
செய்தி முன்னோட்டம்
சாலையில் வழிப்பறி கொள்ளை இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு வினோதமான கொள்ளை சம்பவம் ஈடுப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் ஒருவர் காரில் செல்லும்போது, ஒருவர் ஓடிவந்து காரில் ஏறி விபத்து ஏற்பட்டது போல் விழுகிறார்.
இவர் செய்யும் செயல் காரின் டேஷ்காம் கேமராவில் பதிவாகிறது. சம்மந்தப்பட்ட கார் ஓட்டுனர் அவர் வருவதை அறிந்து சற்று தூரத்திற்கு முன்பாகவே காரை நிறுத்தியுள்ளார்.
அந்த நபர் வேண்டுமென்ற செயல்பட்டது தெரிகிறது. பணம் பறிக்க அந்த நபர் கார் ஓட்டுனரிடம் கேட்க, கார் ஓட்டுனர் சிம்பிளாக காரில் கேமிரா உள்ளதை கூறுகிறார்.
உடனே அங்கிருந்து அந்த நபர் சுதாரித்துக்கொண்டு செல்கிறார். இந்த வீடியோ வைரலாகி எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துகிறார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
நூதன திருட்டு கொள்ளையில் ஈடுபடும் நபர்கள்
Little perks of having a Dashcam!
— Agent Peenya (@Themangofellow) February 17, 2023
Video shared in my car owners group! pic.twitter.com/2sED8qy1uv