Page Loader
மின்சார வாகனங்களுக்காக அமெரிக்காவில் முதல் வயர்லெஸ் சார்ஜிங் சாலை அறிமுகம்
மின்சார வாகனங்களுக்காக அமெரிக்காவில் முதல் வயர்லெஸ் சார்ஜிங் சாலை அறிமுகம்

மின்சார வாகனங்களுக்காக அமெரிக்காவில் முதல் வயர்லெஸ் சார்ஜிங் சாலை அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 30, 2023
02:15 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் பொது மக்களுக்காக நாட்டின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் சாலையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கார்க்டவுனில் மிச்சிகன் சென்ட்ரல் அருகே 14வது தெருவில் அமைந்துள்ளது. சுமார் கால் மைல் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை வெளித்தோற்றத்தில் எதுவும் தெரியவில்லை என்றாலும், அதன் மேற்பரப்பிற்கு அடியில் தூண்டல்-சார்ஜிங் சுருள்களை கொண்டுள்ளது. இதன் மூலம் மின்சார வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்லும் போது அவற்றை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. இத்தொழில்நுட்பத்தை எலக்ட்ரான் என்ற இஸ்ரேலிய நிறுவனம் அமைத்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும், எதிர்காலத்தில் மின்சார வாகனம் சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்பை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் நிலையான போக்குவரத்து தீர்வுகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

USA introduces wireless electric chanrging road for EV

வயர்லெஸ் சார்ஜிங் சாலை எவ்வாறு செயல்படுகிறது?

வயர்லெஸ் ரிசீவர் பொருத்தப்பட்ட மின்சார வாகனங்கள் இந்த புதுமையான சாலையில் வாகனம் ஓட்டும்போது அல்லது நிறுத்தும்போது சார்ஜ் செய்யலாம். சார்ஜிங் செயல்முறையானது, வாகனத்தின் ரிசீவர் தரைக்கு அடியில் உள்ள முதன்மைச் சுருளில் இருந்து சார்ஜ் எடுப்பதை உள்ளடக்கியது. எலக்ட்ரானின் வணிக மேம்பாட்டுத் துணைத் தலைவர் ஸ்டீபன் டோங்கூர், வயர்லெஸ் சாலைகள் அனைத்து கார்கள், பாதசாரிகள் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் சார்ஜிங் பிரிவுகள் சிறப்பு ரிசீவரைக் கொண்ட வாகனங்களில் மட்டுமே செயல்படும் என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்கா மட்டுமல்லாது பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், இத்தாலி, நார்வே மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் இந்த தொழில்நுட்பத்தை எலக்ட்ரான் நிறுவனம் அமைத்து வருகிறது.