இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகவிருக்கும் தொடக்கநிலை ப்ரீமியம் பைக்குகள் என்னென்ன?
ப்ரீமியம் பைக்குகளின் தொடக்கநிலை செக்மெண்டான 300சிசி செக்மெண்டானது இந்த ஆண்டு பல புதிய வரவுகளைப் பார்க்கவிருக்கிறது. 300சிசி அல்லது அதற்கும் மேலான இன்ஜினுடன் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம். கேடிஎம் 390 ட்யூக்: கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி இன்றும் கேடிஎம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஒரு பைக் 390 ட்யூக். இந்த பைக்கின் அடுத்த தலைமுறை வெர்ஷனை இந்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது கேடிஎம். யமஹா R3 & MT-03: ப்ரீமியம் பைக்கின் தொடக்கநிலை செக்மெண்டில் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும் இரண்டு பைக்குகள் இவை தாம். இதன் சிறிய வெர்ஷன்கள் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் நிலையில், இந்த பெரிய வெர்ஷன்களுக்காக வெறித்தன வெயிட்டிங்.
ராயல் என்ஃபீல்டு 450 சீரிஸ்:
ஹிமாலயன் 450 மற்றும் 450சிசி ரோட்ஸ்டர் என இரண்டு பைக்குகளை உருவாக்கி வருகிறது ராயல் என்ஃபீல்டு. தங்களுடயை முதல் லிக்விட்-கூல்டு இன்ஜினையும் இந்த பைக்குகளின் மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு 650 சீரிஸ்: 450சிசியைப் போலவே 650சிசி இன்ஜின் கொண்ட இரண்டு புதிய அறிமுகங்களை ராயல் என்ஃபீல்டிடம் நாம் எதிர்பார்க்கலாம். ஷாட்கன் 650 மற்றும் 650சிசி ஸ்கிராம்ப்லர் ஆகிய இரண்டு பைக்களை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஏப்ரிலியா RS 440: முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படவிருக்கும் RS 440 பைக்கை இந்தியாவில் வரும் மாதங்களில் வெளியிடவிருக்கிறது ஏப்ரிலியா. அதன் தொடக்கநிலை ஸ்கூட்டர்களுக்கும், சூப்பர்பைக்குகளுக்கும் இடைப்பட்ட ஒரு மாடலாக இந்த இதனை விற்பனை செய்யவிருக்கிறது.