LOADING...
பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் கார் கனவு நனவாகப்போகுது; மாருதி முதல் டாடா வரை 2026இன் டாப் 5 மாடல்கள் இதோ
2026இல் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.20 லட்சத்திற்கு குறைவான டாப் 5 எலக்ட்ரிக் கார்கள்

பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் கார் கனவு நனவாகப்போகுது; மாருதி முதல் டாடா வரை 2026இன் டாப் 5 மாடல்கள் இதோ

எழுதியவர் Sekar Chinnappan
Feb 01, 2026
05:43 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தை 2026 இல் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கவுள்ளது. குறிப்பாக ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான நடுத்தர பட்ஜெட்டில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் புதிய மாடல்களைக் களமிறக்கத் தயாராகிவிட்டன. இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாப் 5 எலக்ட்ரிக் கார்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மாருதி சுஸூகி

மாருதி சுஸூகி இ-விடாரா

மாருதி சுஸூகி நிறுவனத்தின் முதல் முழுமையான எலக்ட்ரிக் கார் இதுவாகும். ஹூண்டாய் கிரெட்டா இவி மற்றும் டாடா கர்வ் இவி ஆகியவற்றுக்கு போட்டியாக இது அமையும். இதன் பேட்டரி 49 kWh மற்றும் 61 kWh என இரண்டு விருப்பங்களுடன் வருகின்றது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 543 கிமீ வரை பயணிக்கலாம். 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுடன், நவீன இன்டீரியர் வசதிகளைக் கொண்டுள்ள இந்த மாடலின் விலை ₹17 - ₹22 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா

மாருதி இ-விடாராவின் அதே தொழில்நுட்பத்தில் உருவானாலும், டொயோட்டாவின் தனித்துவமான ஹேமர்ஹெட் டிசைனுடன் இது வெளியாகிறது. 49 kWh பேட்டரி கொண்ட மாடல் 440 கிமீ வரம்பையும், 61 kWh பேட்டரி கொண்ட மாடல் 543 கிமீ வரம்பையும் கொண்டுள்ளது. 360-டிகிரி கேமரா, லெவல்-2 ADAS பாதுகாப்பு வசதி மற்றும் JBL சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. பிப்ரவரி 2026 இல் இது வெளியிடப்படும் மற்றும் விலை ₹18 - ₹21 லட்சம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

வின்ஃபாஸ்ட்

வின்ஃபாஸ்ட் லிமோ கிரீன்

வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவின் மிக மலிவான எலக்ட்ரிக் கார் சந்தையைக் குறிவைத்து வின்ஃபாஸ்ட் லிமோ கிரீன் காரை கொண்டு வருகிறது. பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 3-வரிசை இருக்கைகளைக் கொண்ட எம்பிவி ரக எலக்ட்ரிக் கார் இதுவாகும். 60.1 kWh மற்றும் 201 hp பவர் கொண்ட பேட்டரி 450 கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. 5+2 சீட்டிங் அமைப்பு, நவீன டச் ஸ்கிரீன் வசதிகளைக் கொண்ட இது பிப்ரவரி 2026 இல் அறிமுகமாக வாய்ப்புள்ளது. விலை ₹18 - ₹20 லட்சம் வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

டாடா

டாடா பஞ்ச் இவி ஃபேஸ்லிஃப்ட்

தற்போது விற்பனையில் சக்கைப்போடு போடும் பஞ்ச் இவியின் அப்டேட் செய்யப்பட்ட இந்த மாடல், புதிய எல்இடி லைட் பார், மாற்றப்பட்ட முன்பக்க கிரில் மற்றும் அலாய் வீல்களைக் கொண்டிருக்கிறது. 25 kWh பேட்டரி திறன் கொண்ட மாடல் 315 கிமீ வரம்பையும், 35 kWh பேட்டரி திறன் கொண்ட மாடல் 421 கிமீ வரம்பையும் கொண்டிருக்கிறது. புதிய பேட்டரி மூலம் 500 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. இதன் விலை ₹10 - ₹15 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வின்ஃபாஸ்ட்

வின்ஃபாஸ்ட் விஎஃப் 3

வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவின் மிக மலிவான எலக்ட்ரிக் கார் சந்தையைக் குறிவைத்து இந்த மைக்ரோ இவியைக் கொண்டுவருகிறது. இது எம்ஜி கோமெட் காருக்குப் போட்டியாக இருக்கும். காரின் வரம்பு சுமார் 200 - 210 கிமீ வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 191 மிமீ அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட டால்-பாய் டிசைன் அம்சங்களைக் கொண்டிருக்கிறது. விலை ₹8 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை இருக்கலாம்.

Advertisement