
டாடா முதல் BMW வரை.. மே மாதம் வெளியாகவிருக்கும் கார்கள்!
செய்தி முன்னோட்டம்
ஏப்ரலில் பல புதிய கார்கள் அறிமுகமானது. அடுத்த மே மாதம் டாடா முதல் பிஎம்டபிள்யூ வரை என்னென்ன கார்களை அறிமுகம் செய்யவிருக்கின்றன? பார்க்கலாம்.
மாருதி சுஸூகி ஜிம்னி:
ஜிப்ஸியின் அடுத்த கட்ட காராக ஜிம்னியை வெளியிடவிருக்கிறது மாருதி. இந்தியாவிற்கென 5 டோர்கள் கொண்ட ஆஃப்ரோடராக இந்தக் காரை வடிவமைத்திருக்கிறது மாருதி. லேடர் ஃபிரேம் சேஸி மற்றும் 4 வீல் ட்ரைவ் கொண்ட இந்த ஜிப்ஸிக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது. ரூ.10-12 லட்சம் விலையில் இந்தக் கார் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ M2:
இரண்டாம் தலைமுறை M2 மாடலை இந்தியாவில் வெளியிட தயாராகி வருகிறது பிஎம்டபிள்யூ. முழுமையான இம்போர்டட் காராக ரூ.1 கோடி விலையில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது M2.
புதிய கார்கள்
டாடா அல்ட்ராஸ் CNG:
CNG கார்களுக்கு என இந்தியாவில் தனி மார்க்கெட் உருவாகி வருகிறது. அதனை சிறப்பாகப் பயன்படுத்துவது டாடா தான். CNG கிட் பொருத்தப்பட்ட தங்களது மூன்றாவது காராக அல்ட்ராஸ் CNG-ஐ அடுத்த மாதம் வெளியிடவிருக்கிறது டாடா.
இதன் புக்கிங்குகள் ஏற்கனவே தொடங்கவிட்ட நிலையில், அடுத்த மாதம் இதனை வெளியிடவிருக்கிறது டாடா நிறுவனம். ரூ.21,000 கொடுத்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பிஎம்டபிள்யூ X3 M40i:
பிஎம்டபிள்யூ M40i செடானின் இன்ஜினுடன் பெர்ஃபாமன்ஸை அடிப்படையாகக் கொண்டு வெளியாகவிருக்கும் X3 வெர்ஷன் தான் பிஎம்டபிள்யூ X3 M40i.
ஸ்போர்ட் ஸ்டைலிங் மற்றும் பெர்ஃபாமன்ஸ் அப்கிரேடுகள் செய்யப்பட்டிருக்கும் இந்தக் கார் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் நிலையில், இதன் புக்கிங்குககளை ஏற்கனவே துவக்கிவிட்டது பிஎம்டபிள்யூ. ரூ.5 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.