இந்தியாவில் ஜூலை மாதம் என்னென்ன கார்கள் வெளியாகவிருக்கின்றன?
கியா முதல் ஹோண்டா வரை, ஜூன் மாதம் வெளியாவிருக்கும் கார்களின் பட்டியல் இதோ. ஹோண்டாவின் புதிய மிட்சைஸ் எஸ்யூவி: இறுதியாக புதிய மாடலுடன் இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி சந்தையில் களமிறங்கவிருக்கிறது ஹோண்டா. ஐந்தாம் தலைமுறை சிட்டியின் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு ஆறாம் தலைமுறை CR-V மற்றும் வெளிநாடுகளில் விற்பகப்படும் WR-V-வின் ஸ்டைலிங்குடன் ரூ.12-19 லட்சம் விலையில் ஜூன் மாதம் வெளியாகவிருக்கிறது. ஃபோக்ஸ்வாகன் வெர்ட்டஸ் வேரியன்டுகள்: இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் வெர்ட்டஸின் மேலும் சில புதிய வேரியன்டுகளை வெளியிடவிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். ஏற்கனவே இருக்கும் இன்ஜின் மற்றும் கியர் ஆப்ஷன்களின் காம்பினேஷன்களை மாற்றி புதிய வேரியன்ட்களை வெளியிடவிருக்கிறது அந்நிறுவனம். காம்பினேஷன்களுக்கு ஏற்ப விலையும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வாகன் டைகூன் வேரியன்டுகள்:
வெர்ட்டஸைப் போலவே டகூனிலும் புதிய வேரியன்டுகளை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஃபோக்ஸ்வாகன். டர்போ-பெட்ரோல், பெட்ரோல் இன்ஜின்கள், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்கள் ஆகியற்றின் காம்பினேஷன்களை மாற்றி புதிய வேரியன்ட்களை உருவாக்கியிருக்கிறது அந்நிறுவனம். இவற்றோடு புதிய GT எட்ஜ் என்ற லிமிடெட் எடிஷன் ஒன்றையும் ஃபோக்ஸ்வாகன் வெளியிடவிருக்கிறதாம். கியா செல்டோஸ் ஃபேஸ்லிப்ட்: 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செல்டோஸை கியா அப்டேட் செய்யவேயில்லை. கடந்த ஆண்டு தான் மற்ற நாடுகளில் அதன் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியது கியா. தற்போது அந்த ஃபேஸ்லிப்ட் மாடலை இந்தியாவிலும் வெளியிடவிருக்கிறது. காஸ்மெடிக் அப்டேட்கள், புதிய வசதிகள் என பல அறிவிப்புகளை கியாவிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆனால், இன்ஜினில் பெரிய மாற்றம் எனதுவும் இருக்காது என்றே தெரிகிறது.