அடுத்த ஆண்டு இந்தியாவில் EVயை அறிமுகப்படுத்த இருக்கிறது டொயோட்டா
டொயோட்டா தனது முதல் எலக்ட்ரிக் காரை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தும் என்று ஆட்டோகார் இந்தியா தெரிவித்துள்ளது. இது டிசம்பர் 2023 இல் முன்னோட்டமிடப்பட்ட அர்பன் SUV கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். இது மார்ச் 2025க்குள் அறிமுகமாக இருக்கும் மாருதியின் eVXக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதியின் முதல் EV சந்தைக்கு வந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, டொயோட்டாவின் முதல் EV செப்டம்பர்-அக்டோபர் 2025இல் இந்திய ஷோரூம்களில் Vவெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா EVயின் சிறப்பம்சங்கள்
டொயோட்டா அர்பன் எஸ்யூவி கான்செப்ட் 4,300 மிமீ நீளம், 1,820 மிமீ அகலம் மற்றும் 1,620 மிமீ உயரம் கொண்டதாகும். இதன் அம்சங்கள் மாருதி ஈவிஎக்ஸை வெகுவாக ஒத்திருக்கிறது. டொயோட்டாவின் மின்சார SUVயில் இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 60kWh பேட்டரியும் தோராயமாக 550km வரம்பும் இருக்கக்கூடும். மிகவும் மலிவு விலையில் இதே கார் 48kWh பேட்டரி பேக்கையும் 400கிமீ வரம்பையும் கொண்டிருக்கும். இந்த கார் முன்-சக்கர இயக்கி (FWD) மற்றும் இரட்டை-மோட்டார் ஆல்-வீல் டிரைவ் (AWD) ஆகிய இரண்டு கட்டமைப்புகளிலும் இது கிடைக்கும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.