இன்னோவா ஹைக்ராஸ் ZX வகைகளுக்கான முன்பதிவுகளை மீண்டும் நிறுத்தியது டொயோட்டா இந்தியா
டொயோட்டா, இந்தியாவில் அதன் இன்னோவா ஹைக்ராஸ் எம்பிவியின் டாப்-எண்ட் ZX மற்றும் ZX (O) வகைகளுக்கான முன்பதிவுகளை மீண்டும் நிறுத்தி வைத்துள்ளது. ஏற்கனவே விநியோக சிக்கல்கள் காரணமாக ஏப்ரல் 2023 இல் நிறுத்தப்பட்ட முன்பதிவுகள் கடந்த மாதம் தான் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில், அது நடந்து ஒரு மாதத்திற்குள் முன்பதிவுகள் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்பிட்ட மாடல்களுக்கு அதிக தேவை இருப்பதாலும் நீட்டிக்கப்பட்ட காத்திருப்பு காலம் இருப்பதாலும் அதன் முன்பதிவுகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
டாப்-எண்ட் மாடல்களுக்கு மட்டுமே முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது
இன்னோவா ஹைக்ராஸின் ZX மற்றும் ZX (O) வகைகள் முறையே ரூ.30.34 லட்சம் மற்றும் ரூ.30.98 லட்சத்திற்கு(எக்ஸ்-ஷோரூம்)விர்க்கப்படுகிறது. மே 2024 நிலவரப்படி, இதன் ஹைப்ரிட் மாடல் VX மற்றும் VX (O) வகைகளில் கிடைக்கின்றன. இவற்றுக்கு 14 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளன. இதற்கிடையில், கலப்பினமற்ற பெட்ரோல் எஞ்சின் வகைகளுக்கு தற்போது ஆறு மாத காத்திருப்பு காலம் உள்ளது. டாப்-எண்ட் மாடல்களுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டாலும், மற்ற ஹைக்ராஸ் வகைகளுக்கான முன்பதிவுகள் திறந்தே இருக்கும்.