ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறந்த கார் மாடல்கள்
இந்தியாவில் சமீபமாக ரூ.10 லட்சம் விலைக்குள்ளான புதிய கார்களின் அறிமுகங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்தப் புத்தாண்டை ஒட்டி ரூ.10 லட்சத்திற்குள் புதிய காரை விரும்புகிறீர்களா? சந்தையில் அதற்கு என்னென்ன தேர்வுகள் இருக்கிறதென பார்க்கலாம். 1.2 லிட்டர் இன்ஜினுடன் பெட்ரோல் மற்றும் CNG ஆகிய இரண்டு எரிபொருள் பயன்பாட்டுத் தேர்வுகளுடனும். ரூ.6 லட்சம் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியான ஹூண்டாய் எக்ஸ்டர் ரூ.10 லட்சத்திற்குள்ளான கார்களில் சிறந்த தேர்வாக இருக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன், ரூ.7.46 லட்சம் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியான மாருதி சுஸூகி பிரான்க்ஸையும் வாடிக்கையாளர்கள் பரிசீலனை செய்யலாம்.
பட்ஜெட் விலை கார்கள்:
ரூ.10 லட்சத்திற்குள் ஒரு சிறப்பான எலெக்ட்ரிக் கார் வேண்டும் என்பவர்கள் எம்ஜி காமெட்டை தேர்வு செய்யலாம். ரூ.7.98 லட்சம் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை மற்றும் 230 கிமீ ரேஞ்சுடன் விற்பனை செய்யப்படுகிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் ரூ.8.1 லட்சம் தொடக்க விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாடாவின் மேம்படுத்தப்பட்ட 2023 நெக்ஸான் மாடலும் வாடிக்கையாளர்களின் ஆஸ்தான தேர்வாக இருக்கிறது. பட்ஜெட் விலையில் எஸ்யூவி தேடுபவர்கள், ரூ.10 லட்சம் தொடக்க விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் 5 சீட்டர்/ 7 சீட்டர் தேர்வு கொண்ட சிட்ரன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவியை பரிசீலனை செய்யலாம்.