கார் திருட்டைத் தடுக்க என்ன செய்யலாம்?
இந்தியாவில் கார் திருட்டுக்கள் அதிகமாகி வரும் நிலையில், நமது காரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சிறிது நேரம் காரை நிறுத்தி விட்டுச் சென்றாலும், முறையாக லாக் செய்து விட்டுச் செல்வது மிகவும் நல்லது. மேலும், காரின் கதவுகள் ஜன்னல்கள் மற்றும் சன்ரூஃப்கள் முழுமையாக மூடியிருக்கிறதா என சோதனை செய்துவிட்டுச் செல்ல வேண்டும். ஸ்டீயரிங் வீல் லாக் உள்ளிட்ட கருவிகளை பொருத்துவதன் மூலம் கொள்ளையர்கள் எளிதாகக் காரைத் திருடுவதைத் தடுக்கலாம். கார் அலாரம் சிஸ்டத்தை உபயோகிப்பதை பரிசீலனை செய்யலாம். காரை யாராவது திருட முயற்சி செய்தால், உடனடியாக சத்தத்தை எழுப்பி நம்மை அலர்ட் செய்யும் வகையில், இந்த அலாரம் சிஸ்டத்தை அமைக்கலாம்.
கார் திருட்டைத் தடுக்க?
கார் திருடு போனாலும், அதனை உடனடியாக மீட்க GPS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். கார் எங்கு இருக்கிறது என GPS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்நேரத்தில் அவற்றைப் பயன்படுத்தி நம்மால் கண்டறிய முடியும். காரின் ஸ்பேர் சாவிகளை காரிலியே வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அது கொள்ளையர்களுக்கு எளிதான வாய்ப்பை நாமே ஏற்படுத்தித் தருவது போலாகிவிடும். காரை இயக்கத்திலேயே வைத்துவிட்டு செல்லக்கூடாது. குறைவான நேரமாக இருந்தாலும் அவ்வாறு விட்டுச் செல்வது, நமது காரை நாமே பறிகொடுப்பதற்குச் சமம். பாதுகாப்பான வாகன நிறுத்துமிடத்தைத் தேர்ந்தெடுப்பது நலம். பாதுகாப்பு கேமரா, பாதுகாப்புக்கு ஆட்கள் நிறைந்த வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நமது காரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.