ஹைபிரிட் கார் வைத்துள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
சுற்றுச்சூழல் மற்றும் வாகன உமிழ்வின் தாக்கம், உமிழ்வு விதிமுறைகளை கடுமையாக்குதல் மற்றும் மின்மயமாக்கலில் அதிக கவனம் செலுத்துதல் ஆகியவற்றுக்கு இடையே ஹைபிரிட் கார்கள் இந்திய சந்தையில் பிரபலமடைந்து வருகின்றன. ஹைபிரிட் கார்கள் மின்சார பவர் ட்ரெய்ன்கள் மற்றும் உள் எரிப்பு தொழில்நுட்பம் (ஐசிஇ) என இரண்டு வெவ்வேறு உந்துவிசை தொழில்நுட்பங்களுக்கு இடையே ஒரு இணைப்பு பாலத்தை வழங்குகின்றன. மேலும், ஹைபிரிட் பவர்டிரெய்ன் தொழில்நுட்பம் ஐசிஇ தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும்போது எரிபொருள்-திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அறியப்படுகிறது. ஹைபிரிட் வாகனங்கள் ஐசிஇ மற்றும் மின்சார உந்து தொழில்நுட்பம் இரண்டையும் இணைக்கும் அதே வேளையில், இந்த வாகனங்களுக்கு பல்வேறு வகையான பராமரிப்பு பணிகள் தேவை என்ற கருத்து உள்ளது.
ஹைபிரிட் வாகனங்களுக்கு பராமரிப்பு தேவை
ஒருபுறம் ஹைபிரிட் வாகனங்களுக்கு அதிக பராமரிப்பு தேவை எனக் கூறினாலும், அவை மின்சாரத்திலும் இயங்கும் என்பதால், ஹைப்ரிட் கார்களுக்கு ஐசிஇயால் இயங்கும் வாகனங்கள் போன்ற வழக்கமான பராமரிப்பு தேவையில்லை என்ற கருத்துக்களும் உள்ளன. இதை சுருக்கமாகச் சொல்வதென்றால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைப் போலவே ஹைபிரிட் வாகனங்களும் பராமரிப்பு அட்டவணையைப் பின்பற்ற வேண்டும். மின்மயமாக்கப்பட்ட வாகனமாக இருப்பதாலும், மின் மோட்டார் மற்றும் பேட்டரியை உள்பக்கத்தில் வைத்திருப்பதாலும், இந்த வாகனங்களுக்கு அதிக விலையுயர்ந்த மற்றும் திறமையான பராமரிப்புப் பணி அவசியமாகும். ஒரு ஹைபிரிட் வாகனத்தை பராமரிப்பதற்கான முக்கிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை ஹைபிரிட் கார் நீண்ட காலம் சீராக இயங்குவதை உறுதி செய்யும்.
ஹைபிரிட் கார் பராமரிப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
ஐசிஇ வாகனங்களைப் போலவே, ஹைப்ரிட் கார்களுக்கும் இன்ஜின் ஆயில், பிரேக் ஆயில், டிரான்ஸ்மிஷன் ஆயில், கூலன்ட், வைப்பர் திரவம் போன்ற அத்தியாவசிய திரவங்களை மாற்றுவது அல்லது டாப் அப் செய்வது போன்றவற்றை சரியாக செய்ய வேண்டும். டயர்களில் உள்ள பள்ளங்களை சரியாக வைத்திருப்பதோடு, சரியான அளவு காற்று இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளவும். இது ஐசிஇ வாகனங்கள் மட்டுமல்லாது ஹைபிரிட் வாகனங்களின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். ஒரு ஹைப்ரிட் காரின் பேட்டரி பேக் வாகனத்தின் எரிபொருள் திறன் மற்றும் நீண்ட ஆயுளுக்கு இன்றியமையாதது என்பதால், அதை சரியான தொழில்நுட்ப வல்லுனரின் ஆலோசனைப்படி பராமரிப்பது அவசியமாகும். பிரேக்குகள் மற்றும் சஸ்பென்ஷன் வாகனங்களில் பயணிப்பவர்களின் பாதுகாப்பில் முக்கிய அங்கம் வகிப்பதால், இதை சரியாக வைத்திருப்பது முக்கியமாகும்.