டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு செல்ஃப் டிரைவிங்கை அறிமுகப்படுத்தும்! எலான் மஸ்க்
செய்தி முன்னோட்டம்
உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவன அதிகாரி எலான் மஸ்க் டெஸ்லா காரின் விலை குறைப்பு மற்றும் இந்த ஆண்டு முழு சுய இயக்க தொழில்நுட்ப அறிமுகம் பற்றியும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய எலான் மஸ்க், "இதை சொல்ல நான் தயங்குகிறேன், ஆனால் இந்த ஆண்டு அதை செய்வோம் என்று நினைக்கிறேன்" என ஒரு மாநாட்டு அழைப்பில் பேசியுள்ளார்.
மேலும் எலான் மஸ்க் பல ஆண்டுகளாக செல்ஃப் டிரைவிங் திறனை அடைய திட்டமிட்ட, தனது முந்தைய இலக்குகளை தவறவிட்டுள்ளார்.
இப்போது இருக்கும் தொழில்நுட்பம், செயலிழப்புகளைத் தொடர்ந்து சட்ட மற்றும் ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்லா தொழில்நுட்பம் காரை தன்னிச்சையாக மாற்றாது, மேலும் ஓட்டுனர் மேற்பார்வை தேவைப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
Embed
Twitter Post
Elon Musk just said again that @Tesla will achieve Full Self-Driving by the end of the year. Just like @ElonMusk has been saying for the past eight years. If you believe that, I have a bridge in Brooklyn you might be interested in... https://t.co/49JIXh082W pic.twitter.com/6J6NLlpo4g— Dan O'Dowd (@RealDanODowd) April 19, 2023