NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் 'டாடா கர்வ்' எஸ்யூவி, என்ன எதிர்பார்க்கலாம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் 'டாடா கர்வ்' எஸ்யூவி, என்ன எதிர்பார்க்கலாம்?
    இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் 'டாடா கர்வ்' எஸ்யூவி

    இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் 'டாடா கர்வ்' எஸ்யூவி, என்ன எதிர்பார்க்கலாம்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 13, 2023
    01:27 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தங்களுடைய புதிய எஸ்யூவி மாடலான 'கர்வ்'வை (Curvv) அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது டாடா மோட்டார்ஸ்.

    கடந்த சில மாதங்களில் கர்வ் மாடலின் சோதனை ஓட்டத்தை இந்தியாவில் அதிகரித்திருக்கிறது அந்நிறுவனம். சரி, என்னென்ன வசதிகளுடன் உருவாகி வருகிறது டாடா கர்வ்?

    ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி அஸ்டர் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் எரிபொருள் கர்வ் மாடலுக்கு முன்பாகவே, எலெக்ட்ரிக் கர்வ் மாடலை வெளியிடவும் அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

    பல்வேறு வசதிகளுடன் வெளியாகவிருக்கும் கர்வ் மாடலின், கான்செப்டை இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவின் டாடா காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    டாடா

    டாடா கர்வ்: வசதிகள் 

    பெரும்பாலான C பிரிவு எஸ்யூவிக்கள் பனோரமிக் சன்ரூஃப் வசதியுடனேயே அறிமுகப்படுத்தப்படுவதால், புதிய கர்வ் எஸ்யூவியும் பனோரமிக் சன்ரூஃப் வசதியைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முழுமையான எல்இடி விளக்குகள், வெண்டிலேட்டட் சீட்கள், ரியர் ஏசி வெண்ட், பவர்டு டிரைவர் சீட், தானியங்கி முகப்பு விளக்கு மற்றும் தானியங்கி வைப்பர்களைப் பெறவிருக்கிறது டாடா கர்வ்.

    கடந்த மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்களது சஃபாரி மற்றும் ஹேரியர் எஸ்யூவி மாடல்களின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன்களை அறிமுகப்படுத்தியிருந்தது டாடா. அந்த மாடல்களில் வழங்கப்பட்ட ADAS பாதுகாப்பு வசதிகளை புதிய கர்வ் மாடலிலும் டாடா கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எஸ்யூவி

    டாடா கர்வ்: இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் 

    டாடா கர்வ்வின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் ஜென்2 எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் செட்டப் மற்றும் 450 கிமீ ரேஞ்சைக் கொடுக்கக்கூடிய வகையிலான பேட்டரியை டாடா வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், எலெக்ட்ரிக் கர்வ் மாடலின் ஆல் வீல் டிரைவ் வசதியும் டாடா கொடுப்பதற்கான வாய்ப்புகள் சற்று அதிகமாகவே இருக்கின்றன.

    கர்வ்வின் எரிபொருள் வெர்ஷனில், 125hp பவர் மற்றும் 225Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறது டாடா. மேலும், இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டாடா மோட்டார்ஸ்
    எஸ்யூவி
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    டாடா மோட்டார்ஸ்

    ரத்தன் டாடாவின் 85 வது பிறந்தநாள் ஸ்பெஷல்: டாடாவின் 5 விலை உயர்ந்த பொருட்கள் வாகனம்
    ஜனவரி சலுகை: மாதம் ரூ.65,000 வரை தள்ளுபடி விலையில் டாடா கார்கள் ஆட்டோமொபைல்
    மாருதி டாடா ஹூண்டாய் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! விலையை சரிபார்க்கவும் கார் உரிமையாளர்கள்
    2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்! கார் உரிமையாளர்கள்

    எஸ்யூவி

    மஹிந்திரா தார் ஜீப்பை ஸ்டைலாக ஓட்டும் அமிதாப் பச்சன்; வைரலாகும் வீடியோ மஹிந்திரா
    புதிய 'எக்ஸ்டர்' மைக்ரோ எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஹூண்டாய் ஹூண்டாய்
    மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் இந்திய ராணுவம் மஹிந்திரா
    இந்தியாவில் விற்பனையாகி வரும் ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடல் கார்கள் கார்

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் வெளியானது புதிய மினி 'கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன்' சொகுசு கார் சொகுசு கார்கள்
    இந்தியாவில் புதிய 'ஸ்லாவியா மேட் எடிஷன்' மாடலை வெளியிட்டுள்ளது ஸ்கோடா ஸ்கோடா
    ரூ.2.63 லட்சம் விலையில் வெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X ப்ரீமியம் பைக்
    ஜப்பானைச் சேர்ந்த ஸ்கைடிரைவ் நிறுவனத்துடன் பறக்கும் கார்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சுஸூகி சுஸூகி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025