
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெயரை எடுத்தது டாடா பஞ்ச்
செய்தி முன்னோட்டம்
இந்திய வாகனத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் காம்பாக்ட் SUVயான, பஞ்ச், மாருதியின் பல சிறந்த மாடல்களை விஞ்சி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக மாறியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பஞ்ச் முதன்முதலில் இந்த மைல்கல்லை எட்டியது.
மாருதி சுஸுகி விற்பனை செய்த வேகன்ஆரின் 16,368 யூனிட்களை விஞ்சும் வகையில் 17,547 யூனிட்களை டாடா பஞ்ச் விற்றுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் CRETA மார்ச் மாதத்தில் 16,458 யூனிட்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா
இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸின் குறிப்பிடத்தக்க மீட்சி
ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்து பன்ச் நன்றாக விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் மட்டும் 19,158 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.
வேகன்ஆரின் விற்பனையான 17,850 யூனிட்களை பன்ச் கடந்த மாதமும் விஞ்சியுள்ளது.
மாருதியின் பிரெஸ்ஸா எஸ்யூவி 17,113 யூனிட்களை விற்பனை செய்து, அந்த மாதத்தில் மூன்றாவது அதிக விற்பனையாளராக அது உள்ளது.
தொடர்ந்து இரண்டு மாதங்களாக பஞ்ச் முதல் இடத்தில் விற்பனையாகி வருவதால் , இந்தப் போக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிடத்தக்க வகையில் மீண்டு வந்து, மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய்க்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் நிறுவனமாக உயர்ந்துள்ளது.