ரூ.11 லட்சத்துக்கு இந்தியாவில் வெளியானது டாடா பஞ்ச் EV
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா பஞ்ச் EVஐ ரூ.11 லட்சத்துக்கு(எக்ஸ்-ஷோரூம்) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். Tiago.ev, Tigor.ev மற்றும் Nexon.ev ஆகிய எலக்ட்ரிக் வாகனங்களின் வரிசையில் தற்போது நுழைவு-நிலை SUV ஆன Tata Punch.evயும் இணைந்துள்ளது. புதிய தொழ்ல்நுட்பமான 'Acti.ev' கட்டமைப்பின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் 421கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டதாகும். இந்நிலையில், டாடா பஞ்ச் EVக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஜனவரி 22 ஆம் தேதி முதல் இதற்கான டெலிவரிகள் தொடங்க உள்ளது.
டாடா பஞ்ச் EV அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்
ICE மாதிரி போலவே வடிவமைக்கப்பட்டுள்ள டாடா பஞ்ச் EV, மெலிதான முழு அகல LED பகல்நேர இயங்கும் விளக்கு மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் போன்ற சிறிய மேம்படுத்தல்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், டாடா பஞ்ச் EV ஆனது ஒரு பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைக் கொண்டுள்ளது. அது போக, காற்றோட்டம் கொண்ட முன் இருக்கைகள், ஒரு காற்று சுத்திகரிப்பு, ஒரு மின்னணு பார்க்கிங் பிரேக், ஒரு குரல் கட்டுப்படுத்தப்பட்ட மின்சார சன்ரூஃப், ஒரு வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 360-டிகிரி-வியூ கேமரா அமைப்பு ஆகியவை இந்த காரில் உள்ள மற்ற வசதிகளாகும்.