ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகிறது டாடா மோட்டார்ஸின் கர்வ்வ் கூபே SUV
செய்தி முன்னோட்டம்
ஆகஸ்ட் 7, 2024 அன்று இந்திய சந்தையில் தனது புதிய Curvv கூபே SUVயை அறிமுகம் செய்ய உள்ளது டாடா மோட்டார்ஸ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பிரிவில் மின்சாரம் மற்றும் ICE பவர்டிரெய்ன்கள் இரண்டையும் வழங்கும் முதல் கார், கர்வ்வ் SUV ஆகும்.
ஆனால், இதன் இரண்டு பதிப்புகளின் விலைகளும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்படுமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 இல் இது முதன் முதலாக காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த மாடலின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் டீசர் வீடியோக்கள் மற்றும் கிளிப்களை டாடா மோட்டார்ஸ் ஆன்லைனில் பகிர்ந்து வருகிறது.
டாடா மோட்டார்ஸ்
கர்வ்வ் கூபே SUVவின் அம்சங்கள்
இந்த மாடலின் உட்புறத்தில் சன்ரூஃப், காற்றோட்டமான முன் இருக்கைகள், ஷிஃப்டர்கள் மற்றும் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிரைவ் மோடுகள், ADAS சூட் மற்றும் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவையும் இதில் அடங்கும்.
8-ஸ்பீக்கர் ஒலி அமைப்பு, மழை-அறியும் வைப்பர்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே இணக்கத்தன்மை மற்றும் காற்று சுத்திகரிப்பு ஆகிய கூடுதல் வசதிகளும் இதில் இருக்கும்.
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களுடன் கர்வ்வ் மாடலை வெளியிட டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் அவை இணைக்கப்பட்டிருக்கும்.