LOADING...
திருப்பூரில் டாடா ஹாரியர் எலக்ட்ரிக் பின்னோக்கி உருண்டு விபத்து; ஒருவர் பலி; சம்மன் மோட்தான் விபத்திற்கு காரணமா?
திருப்பூரில் டாடா ஹாரியர் எலக்ட்ரிக் பின்னோக்கி உருண்டு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி

திருப்பூரில் டாடா ஹாரியர் எலக்ட்ரிக் பின்னோக்கி உருண்டு விபத்து; ஒருவர் பலி; சம்மன் மோட்தான் விபத்திற்கு காரணமா?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 22, 2025
03:25 pm

செய்தி முன்னோட்டம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த துயரமான சம்பவத்தில், டாடா ஹாரியர் எலக்ட்ரிக் கார் ஒன்று பின்னோக்கி உருண்டு வந்து, ஒருவரை நசுக்கியதில் அவர் உயிரிழந்தார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இந்த விபத்து பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் திருப்பூர் பனியன் கடையில் பணிபுரிந்து வந்த செந்தில் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் வெளியான பதிவின்படி, காரின் "சம்மன் மோட்" (Summon Mode) எனப்படும் ஒரு வசதி செயலிழந்ததே விபத்துக்கான காரணம் என உயிரிழந்தவரின் உறவினர் குற்றம் சாட்டியுள்ளார். இது காரின் சாவி மூலம் காரை பின்னோக்கி அல்லது முன்னோக்கி நகர்த்த உதவும் ஒரு அம்சம் ஆகும்.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் வருத்தம்

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், கார் ஓட்டுநர் உள்ளே நுழைவதற்கு முன்பே, கார் சாய்வில் பின்னோக்கி உருண்டு வருவதைக் காட்டுகிறது. டாடா ஹாரியர் எலக்ட்ரிக் வாகனம், இந்த ஆண்டு ஜூன் 3 அன்றுதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள டாடா மோட்டார்ஸ், "சம்பவத்தைக் கேட்டு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் அடைந்தோம். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எங்களின் இரங்கல்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது அனைத்து தொடர்புடைய தகவல்களையும் நாங்கள் சேகரித்து வருகிறோம்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

சம்பவம் 

சம்பவம் குறித்து சொல்வது என்ன?

டாடா மோட்டார்ஸ் தனது அறிக்கையில் மேலும், "சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவை வைத்துப் பார்க்கும்போது, கார் ஒரு சாய்வில் ஈர்ப்பு விசையால் பின்னோக்கி உருண்டு, ஒரு பொருளின் மீது மோதியது போல் தெரிகிறது. இது, காரின் மோட்டார் இயக்கத்தில் இல்லை என்பதை உணர்த்துகிறது. சம்பவம் நடந்த பிறகு, கார் இன்னும் குடும்பத்தினரிடமே உள்ளது, அதை ஓட்டியும் உள்ளனர். எங்களால் இதுவரை காரை ஆய்வு செய்ய முடியவில்லை." என்று தெரிவித்துள்ளது.