டாடா அல்ட்ரோஸ் EV இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்
Acti.EV கட்டமைப்பை கொண்ட டாடா அல்ட்ரோஸ் EV இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ளது. முதலில், நெக்ஸான் EV வெளியானதும் டாடா அல்ட்ரோஸ் EVஐ அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டிருந்தது. 2019 இல் பேட்டரி பேக்கேஜிங்கால் டாடா கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டதால் டாடா அல்ட்ரோஸ் EV வெளியாக தாமதமானது. அதற்குப் பிறகு, அல்ட்ரோஸ் EV பற்றி எந்த தகவலும்வெளியாகவில்லை. இதற்கிடையில், டாடா டியாகோ EV மற்றும் பஞ்ச் EV ஆகியவை வெளியாகின. ஆனால் பஞ்ச் EV அறிமுகத்தின் போது, மேலும் 5 மாடல்கள் அடுத்து அறிமுகமாக இருப்பதை டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன வணிகத்தின் எம்டி ஷைலேஷ் சந்திரா உறுதிப்படுத்தினார்.
டாடா அல்ட்ரோஸ் EV வெளியாக மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?
பஞ்ச் EV, Curvv EV மற்றும் ஹாரியர் EV ஆகியவை 2024 இல் வெளியிடப்படும். சியரா EV மற்றும் அல்ட்ரோஸ் EV ஆகியவை 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட உள்ளது. டாடா பஞ்ச் EV ஆனது Acti.ev கட்டமைப்பை கொண்ட முதல் மாடலாக மாறியுள்ளது. அதே கட்டமைப்பு அடுத்து வரும் EV களிலும் பயன்படுத்தப்பட உள்ளது. கடைசியாக டாடா பேட்டரி பேக்கேஜிங் சிக்கலைச் சரிசெய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால், டாடா அல்ட்ரோஸ் EVஐ அறிமுகப்படுத்துவதில் அடுத்து எந்த சிக்கலும் இருக்காது என்று நம்பப்படுகிறது. பஞ்ச் EVஐ போன்ற கட்டமைப்பை டாடா அல்ட்ரோஸ் EV கொண்டுள்ளதால், அதன் பேட்டரியின் அளவும் வடிவமைப்பும் பஞ்ச் EV ஒத்திருக்கும் என்று பேசப்படுகிறது.