
ரூ.9,000 கோடி முதலீடு; ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
செய்தி முன்னோட்டம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடியில் அமைக்க உள்ள தனது புதிய ஆட்டோமொபைல் தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 28) அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில் டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி துறை அமைச்சர் காந்தி மற்றும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் டாடா மோட்டார்ஸ், தமிழக அரசின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆண்டுக்கு இரண்டு லட்சம் வாகனத் திறன் கொண்ட இந்த ஆலையில், ஜாகுவார், லேண்ட் ரோவர் மாடல்கள் மற்றும் பிற டாடா பயணிகள் கார்களின் எலக்ட்ரிக் வாகன மாடல்களை அதிகளவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
5,000 பேருக்கு வேலைவாய்ப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான சிப்காட் நிறுவனத்தின் பனப்பாக்கம் தொழிற்பேட்டையில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது.
இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் தனது ஆண்டுக்கு இரண்டு லட்சம் வாகனங்களின் ஆரம்பத் திறனில் மூன்றில் ஒரு பங்கை ஜாகுவார் லேண்ட் ரோவர் எலக்ட்ரிக் வாகனங்களுக்காக ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குள் அதன் அனைத்து ஜாகுவார், லேண்ட் ரோவர் வாகனங்களையும் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதற்கு கவனம் செலுத்துகிறது.
இந்த ராணிப்பேட்டை ஆலை அதை பெரிய அளவில் அடைய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய காணொளி
#WATCH | ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ₹9000 கோடி மதிப்பில் அமையும் டாடா மோட்டார்ஸ் கார் ஆலைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
— Sun News (@sunnewstamil) September 28, 2024
இந்த ஆலையில் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க அந்நிறுவனம் திட்டம். இதன்மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்… pic.twitter.com/8GL6PswIrT