Page Loader
அதிக மாதாந்திர விற்பனையை எட்டியுள்ளது சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா

அதிக மாதாந்திர விற்பனையை எட்டியுள்ளது சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா

எழுதியவர் Sindhuja SM
Jun 03, 2024
07:37 pm

செய்தி முன்னோட்டம்

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா மே 2024 இல் 1,11,512 யூனிட்களை விற்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனையைக் குறிக்கிறது. இந்த எண்ணிக்கை, மே 2023 இல் விற்கப்பட்ட 91,316 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு(YoY) சுஸுகி மோட்டார்சைக்கிளின் வளர்ச்சி 22% அதிகரித்துள்ளது. சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையும் கடந்த மாதம் மொத்தம் 92,032 யூனிட்கள் விற்பனையாகி கணிசமாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 37% வளர்ச்சியாகும்.

சுஸுகி

 ஒட்டுமொத்த விற்பனை செயல்திறனில்  சுஸுகி திருப்தி 

உள்நாட்டு விற்பனையில் சாதனை படைத்தாலும், சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா மே 2024 இல் ஏற்றுமதியில் 19.76% சரிவைச் சந்தித்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட 24,276 யூனிட்கள் ஏற்றுமதியை ஒப்பிடுகையில் சுஸுகி நிறுவனம் 19,480 யூனிட்களை மட்டுமே இந்த வருடம் ஏற்றுமதி செய்துள்ளது. இருப்பினும், சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெனிச்சி உமேடா, ஒட்டுமொத்த விற்பனை செயல்திறனில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வெற்றிக்கு வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, ஆதரவு மற்றும் அவர்களது டீலர் நெட்வொர்க்கின் அர்ப்பணிப்புதான் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.