
இணையத்தில் கசிந்த புதிய ஹிமாலயன் 450 பைக்கின் புகைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹிமாலயன் 450 பைக்கானது நவம்பர் 1-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவிருக்கும் நிலையில், அந்த பைக்கின் தயாரிப்பு வடிவம் இணையத்தில் கசிந்திருக்கிறது.
தற்போதைய ஹிமாலயன் பைக்கில் இருந்து பல்வேறு வகையில் புதிய மாற்றங்களையும் புதிய வசதிகளையும் பெற்றிருக்கிறது புதிய ஹிமாலயன் 450.
முக்கியமாக, தற்போதைய ஹிமாலயனில் 411சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், புதிய ஹிமாலயனில் முற்றிலும் புதிய 450சிசி இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிரது ராயல் என்ஃபீல்டு.
இந்தப் புதிய இன்ஜினைப் பயன்படுத்தி ஐந்து புதிய பைக்குகளை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் முதல் பைக்காக வெளியாகவிருக்கிறது ஹிமாலயன் 450.
ராயல் என்ஃபீல்டு
என்னென்ன புதிய வசதிகளைக் கொண்டிருக்கிறது புதிய ஹிமாலயன் 450:
புதிய ஹிமாலயனில், முன்பக்கம் USD ஃபோர்க், முழுவதும் எல்இடி விளக்குகள் மற்றும் புத்தம் புதிய சிங்கிள் பாடு இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகியவற்றைக் கொடுத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
மேலும், நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற வகையில், தற்போதைய ஹிமாலயனை விட நல்ல இடவசதியுடன் கூடிய பெரிய சீட்களை புதிய ஹிமாலயன் 450-யில் வழங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
தற்போதைய ஹிமாலயனில் 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய ஹிமாலயனில் இதைவிடப் பெரிய பெட்ரோல் டேங்க்கே கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிமாலயனுக்கு முன்னதாக, இன்னும் சில நாட்களில் மேம்படுத்தப்பட்ட புல்லட் 350 பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.