LOADING...
ராயல் என்ஃபீல்டின் எலெக்ட்ரிக் ஹிமாலயன் (Him-e) இப்படித்தான் இருக்கும்? மாடல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது
ராயல் என்ஃபீல்டின் எலெக்ட்ரிக் ஹிமாலயன் (Him-e) மாடல் புகைப்படங்கள் வெளியானது

ராயல் என்ஃபீல்டின் எலெக்ட்ரிக் ஹிமாலயன் (Him-e) இப்படித்தான் இருக்கும்? மாடல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Aug 24, 2025
06:51 pm

செய்தி முன்னோட்டம்

ராயல் என்ஃபீல்டின் எலெக்ட்ரிக் ஹிமாலயன் பைக் மாடல் Him-e என்ற பெயரில் தயாரிக்கப்படவுள்ள நிலையில், அதன் தயாரிப்புக்குத் தயாரான மாதிரியின் புதிய உளவுப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. முன்னர் லடாக்கில் சோதனை செய்யப்பட்டபோது பைக் மறைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது வெளியான புகைப்படங்கள் அதன் வடிவமைப்பு விவரங்களை வெளிப்படுத்துகின்றன. இந்த Him-e பைக், அதன் கான்செப்ட் வடிவமைப்பிற்கு ஏற்ப, கிளாசிக் ஹிமாலயன் வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொள்கிறது. இது வட்டமான எல்.இ.டி ஹெட்லேம்ப், ஒரு சிறிய வின்ட்ஷீல்ட் மற்றும் ஒரு அட்வென்ச்சர் டூரர் தோற்றத்தைக் கொண்டுள்ளது. பேட்டரி மற்றும் பிற எலெக்ட்ரிக் பாகங்களுக்கான இடத்தை உள்ளடக்கிய மெல்லிய டாங்க் அமைப்பு மற்றும் உலோகப் பாதுகாப்புக் கவசங்கள் இதில் உள்ளன.

முக்கிய அம்சங்கள்

மாடலின் முக்கிய அம்சங்கள்

இந்த மாடலில் தங்க நிற யுஎஸ்டி முன் ஃபோர்க்குகள், தங்க நிற ஸ்போக் அலாய் சக்கரங்கள் மற்றும் டூயல்-டோன் ஆஃப்-ரோடு டயர்கள் உள்ளன. இது ஒரு டூயல்-டோன் ஃபினிஷ் கொண்ட ஒற்றை இருக்கை அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், எடையைக் கட்டுப்படுத்த, பேட்டரி அமைப்பைச் சுற்றியுள்ள பேனல்கள் அலுமினியத்தால் செய்யப்பட்டிருக்கலாம். தொழில்நுட்ப ரீதியாக, இதில் முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் இரட்டை ஸ்விங்கார்ம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பைக்கின் முன்புறத்தில் இரண்டு பேட்டரி யூனிட்கள் பொருத்தப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது.

பேட்டரி

பேட்டரி மற்றும் ரேஞ்ச் விபரங்கள்

அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், முந்தைய அறிக்கைகளின்படி, Him-e ஆனது 14 kWh பேட்டரி மற்றும் 74.5 kW (100 hp) மோட்டார் கொண்டிருக்கும். இதுவே ராயல் என்பீல்டின் மிகவும் சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிளாக இருக்கும். இதன் ரேஞ்ச் 200 முதல் 250 கி.மீ வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய டிஜிட்டல் திரை, பல ரைடிங் மோட்கள் (Zen, Off-Road, Tour, Rally), மாற்றக்கூடிய ஏபிஎஸ் மற்றும் நேவிகேஷன் போன்ற அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.