
பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்ஃபீல்டு நிறுவனம்!
செய்தி முன்னோட்டம்
இந்த மாதத் தொக்கத்தில் தான் தங்களது ஃப்ளாக்ஷிப் மாடல்களான 650சிசி சீரிஸ் பைக்குகளின் விலையை உயர்த்தியது ராயல் என்ஃபீல்டு. தற்போது தங்களின் 350சிசி மற்றும் 450சிசி சீரிஸ் பைக்குகளின் விலையையும் உயர்த்தியிருக்கிறது அந்நிறுவனம்.
ஹண்டரில் இரண்டு வேரியன்ட்கள், கிளாஸிக் 350-யின் 6 வேரியன்ட்கள், ஸ்கிராம் 411-ன் இரண்டு வேரியன்ட்கள் மற்றும் ஹிமாலயனின் ஒரு வேரியன்ட் என மொத்தம் 11 வேரியன்ட்களின் விலையை உயர்த்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
ஹண்டர் 350 டேப்பர் கலரில் ரூ.2,750 தொடங்கி ஹிமாலயன் கிளேசியர் ப்ளூ வேரின்டில் ரூ.5,000 வரை விலையை உயர்த்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
கிளாஸிக்க மாடல்களின் விலை ரூ.2,900 முதல் ரூ.3,500 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஸ்கிராம் மாடல்களின் விலை ரூ.3,400 முதல் ரூ.3,900 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Royal Enfield 650 Twins - Price Hike May 2022 pic.twitter.com/pgXcjCJKcn
— RushLane (@rushlane) May 5, 2022