விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு!
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மின்சார இ-ஸ்கூட்டர்களை தடைசெய்வது குறித்து பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பல விபத்துக்களுக்கு இவை காரணமாக அமைவதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி அடுத்த வருடம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு பாரிஸ் தயாராகி வருகிறது.
நகரத்தில் Lime, Dott மற்றும் Tier என்று இ-ஸ்கூட்டர்களை இயக்கும் மூன்று நிறுவனங்கள் உள்ளன.
இது ஒரு பொது ஆலோசனை எனவும் அவர் தெரிவித்தார். எனவே 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் தற்போது வாடகைக்கு எடுக்கப்படும் வாகனங்களால் பல ஆபத்தான விபத்துக்கள் ஏற்படுகின்றன எனக் கூறினார்.
இதுகுறித்து பாரிஸில் வாடகைக்கு கிடைக்கும் இ-ஸ்கூட்டர்களை தடைசெய்வது குறித்த வாக்கு எடுப்பில், 2024 ஒலிம்பிக்கிற்கு முன்னதாக போக்குவரத்து பிரிவினையின் சிக்கலைத் தீர்ப்பதற்காக, பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ அறிவிப்பை வெளியிட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
பாரிஸில் வாடகை மின்சார ஸ்கூட்டர்கள் தடைசெய்ய வாக்கெடுப்பில் முன்னிலை
#France: Parisians voted to ban rental electric scooters in city. Official results showed that almost 90% of votes cast favoured ban battery-powered devices. The referendum called in response to a rising number of people being injured, killed on e-scooters in French capital.
— All India Radio News (@airnewsalerts) April 3, 2023