பல டிஜிட்டல் நவீன வசதிகளுடன் வெளியான Odysse Vader மின்சார பைக்!
இந்திய வாகனசந்தையில் இயங்கும் மின்சார வாகன நிறுவனத்தில் Odysse-வும் ஒன்று. இந்த நிறுவனம் புது வகையான எலக்ட்ரிக் வாகனத்தை இந்திய விற்பனையில் Odysse Vader அறிமுகம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு ரூ. 1,09,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அஹமதாபாத் எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். மற்ற மாநிலங்களில் விலை வேறுபட்டு 20 ஆயிரம் ரூபாய் வரை அதிகமாக விற்பனை செய்யப்படலாம். அதன் படி, மற்ற மாநிலத்தில் 1,29,999 ரூபாய்க்கு இந்த எலக்ட்ரிக் பைக் கிடைக்கும். இந்த பைக்கின் முக்கிய அம்சமாக 7 அங்குல ஆண்ட்ராய்டு அம்சம் கொண்ட திரை வழங்கப்பட்டு உள்ளது.
கூகுள் மேப் மற்றும் 7 அங்குல திரையுடன் வெளியான எலக்ட்ரிக் பைக்
மேற்கொண்டு கூகுள் மேப், ப்ளூடூத் வசதி, எங்கே பார்க்கிங் செய்தோம் என அனைத்தையும் காணமுடியும். இந்த பைக் ஒரு முழு சார்ஜில் 125கிமீ தூரம் வரை பயணம் செய்கிறது. பேட்டரி திறனாக 3.7 kWh பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை ஒரு GP67 உடைய லித்தியம் பேட்டரி. பேட்டரியை சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இந்த பைக் டாப் ஸ்பீடு 85கிமீ வேகத்தில் செல்லும். மூன்று விதமான ரைடிங் மோட் கொடுக்கப்பட்டுள்ளது. 5 விதமான நிறங்களில் இந்த பைக் கிடைக்கும். சிறந்த பிரேக்கிங்கிற்காக முன்பக்கம் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முக்கியமாக பைக் வெப்பம் அதிகமானால் அதுகுறித்த எச்சரிக்கையும் தானாகவே வழங்கும் எனக்கூறியுள்ளனர்.