ஸ்மார்ட் கீ வசதியுடன் ஹோண்டாவின் புதிய ஆக்டிவா 125 அறிமுகம்!
முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா புதிய ஆக்டிவா 2023 125 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ஓபிடி 2 விதிகளுக்கு ஏற்ப தயார் செய்யப்பட்டுள்ளது. 4 நிறங்களில் இது வெளியாகியுள்ளது. இதில், H-Smart தான் இந்த ஸ்கூட்டரின் சிறப்பு அம்சமே. கார்களில் வழங்கக்கூடிய ஸ்மார்ட் வகை கீயை வழங்கியுள்ளது. இதுமட்டுமின்றி புதிய ACG ஸ்டார்ட்டரை சேர்த்திருப்பதாக ஹோண்டா தெரிவித்து இருக்கின்றது. இவை சத்தமில்லாமல் வாகனத்தை ஆன் செய்யவும், வாகனம் இயங்கிக்கொண்டிருக்கும் போதே சார்ஜ் செய்யவும் உதவுகிறது. இந்த ஸ்கூட்டரில் 6 என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ஆக்டிவா 125-க்கு ரூ.78,920 ஆரம்ப விலையாகவும், அதிகபட்சம் ரூ. 88,093 ஆகவும் உள்ளது.